திருச்சி: முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோர் ஆகியோருக்கு பூஸ்டர் டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று (ஜனவரி 10) தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக முன்களப் பணியாளர்களான திருச்சி மாநகர காவல் துறையினருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று (ஜனவரி 11) தொடங்கியது.
அதனை மாநகர காவல் துறை ஆணையர் கார்த்திகேயன் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், "இன்று திருச்சி மாநகர காவலர்களுக்கு காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ஆயுதப்படை மைதானம், காவலர்கள் குடியிருப்பு ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும். திருச்சி மாநகரில் 97 விழுக்காட்டினர் இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தியுள்ளனர்.
அவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பாடும். ஊரடங்கிற்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும், காவலர்களால் மட்டும் ஊரடங்கின்போது மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாது" எனக் கூறினார்.
இதையும் படிங்க: Video: பெண் சிலையை முத்தமிட்டுக் கொஞ்சும் முதியவர்!