திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே ஆர்.எஸ் ரோடு ரயில்வே கேட்டின் அருகில் நேற்று தண்டவாளத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து சம்பவயிடத்திற்குச் சென்ற ரயில்வே காவலர்கள் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இதில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அழகர் மகன் தனகோபால் (27) என்பதும், இவர் வையம்பட்டியில் தங்கி துவரங்குறிச்சியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
இந்நிலையில் இளைஞர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து ரயில்வே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.