சமயபுரம் : அறநிலையத் துறை சார்பில் மாதந்தோறும் பவுர்ணமி நாளில் தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற 12 அம்மன் கோயில்களில் 108 திருவிளக்கு பூஜை நடத்தப்படும் என நிகழாண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் அறநிலையத் துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது, அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்தார்.
அதன்படி, தஞ்சாவூர் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில், பண்ணாரி மாரியம்மன் கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், என 12 அம்மன் கோயில்களுக்கான பௌர்ணமி தின விளக்கு பூஜையை நேற்று(ஜூன்.14) அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு திருக்கோயிலில் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இதில் திருச்சி, சமயபுரம், தஞ்சாவூர், கும்பகோணம், பெரம்பாலுர், மற்றும் சுற்றியுள்ள மகளிர்கள் 108 பேர் பக்தியுடன் இவ்விளக்கு பூஜையில் கலந்து கொண்டு விளக்குகளை ஏற்றிய பின், இத்திருக்கோயிலின் மாரியம்மனை நினைத்து 108 முறை அர்ச்சனை செய்து கற்பூரம் காட்டி வழிபட்டனர். பௌர்ணமி தின நாளை முன்னிட்டு இன்று(ஜூன்.15) 108 மகளிர்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
சமத்துவம், சமதர்மம் ஆகிய இரண்டும் நிலைநாட்டப்படுவதாகவும் அனைவரும் ஒரே மாதிரியான உடை அணிந்து ஒருவர் பட்டாடை அல்லது பருத்தி ஆடை என்று இல்லாமல் இறைவன் முன்பு அனைவரும் சமம் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கின்ற பூஜை இந்த திருவிளக்கு பூஜையாகும்.
இந்த திருவிளக்கு பூஜையில் பங்கேற்றவர்கள் சமயபுரம் மாரியம்மன் தெய்வத்தை படமாக வைத்து 108 முறை அர்ச்சனை செய்து வழிபட்டு இருப்பதாகவும் திருவிளக்கு பூஜையில் மகளிர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விளக்கு, குங்குமச்சிமிழ் மற்றும் தாம்பூலம் பூஜையில் காட்டிய கற்பூரம் ஆகியவற்றின் நன்மை குறித்தும் எடுத்துரைத்து பேசினார். இந்நிகழ்வில் திருக்கோயில் இணை ஆணையர், மற்றும் பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பேசாம அப்பிடியே போயிருக்கலாம்..சுங்க கட்டணத்திற்கு பயந்து குறுக்கு வழியாக சென்ற லாரி.. ரயில்வே தடுப்பில் மாட்டி தவிப்பு