திருச்சி அருகே வசிக்கும் லாரி ஓட்டுநரான தந்தை தனது 14 வயது மகளுக்கு பாலியல் சொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதையறிந்து அதிர்ச்சியடைந்த தாய், லால்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாகியுள்ள ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
மாணவ மாணவியர்கள் - நல்ல எதிர்காலத்தை எண்ணிச் செயல்படுங்கள்
தமிழ்நாடு அரசு இது போன்று மாணவ, மாணவியர்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள், ஆபாச மிரட்டல்கள் மற்றும் அதனால் எதிர்கொள்ளும் பாதிப்புகளிலிருந்து அவர்களைத் தடுப்பதற்காகவே உதவி மையங்கள் மற்றும் புகார் எண்கள் போன்றவற்றை அமைத்து தீவிரமாகக் கண்காணித்து வருகிறது.
பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் இது போன்ற செயல்களினால் பல பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். இதனால், அவர்கள் தைரியத்துடன் இது போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்வதற்காக மற்றுமொரு பக்குவமற்ற செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளாமல், தகுந்த வழிகளில் நம்பிக்கைக்குரியவர்களிடம் தங்களுக்கு உள்ள தொல்லைகளுக்கு தீர்வு காண முயலவேண்டும். அதுவே, தங்களின் எதிர்காலத்திற்கும் தங்கள் குடும்பத்திற்கும் நல்ல வழிவகுக்கும் என்பதை மனதில் எண்ணிச் செயல்பட வேண்டும்.
எனவே, தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் பற்றிய புகார்களை உரிய முறையில் அணுக, இதுபோன்ற செயல்கள் நடக்கும்பொழுது பாதிக்கப்பட்ட மாணவர்கள், மாணவிகள் 14417- என்ற உதவி எண்ணுக்கு அழைத்து குறைகளைப் பதிவுசெய்வதால் அவைகளுக்குத் தீர்வு கிடைக்கும்.
இதையும் படிங்க: சென்னையில் ஆட்சியர்களுடன் மாநாடு - ஸ்டாலினின் 'சிறப்பான' வியூகம்