திருச்சி மாவட்டம் மணப்பாறையின் மையப்பகுதியில் செயல்பட்டு வந்த காய்கறிச் சந்தையில் பொதுமக்கள் சமூக விலகலைக் கடைபிடிக்க போதிய இடவசதியில்லாததால் கரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் காய்கறிச் சந்தையானது மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மஞ்சம்பட்டி புனித அந்தோணியர் மேல்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.
இந்த புதிய காய்கறிச் சந்தையானது மணப்பாறையில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால், இந்த காய்கறிச் சந்தையை மணப்பாறை பேருந்து நிலையம் அல்லது மதுரை சாலையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட ஏதேனும் ஒரு பகுதிக்கு மாற்றித் தரவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும், மதுரை சாலை, கோவில்பட்டி சாலை மற்றும் திருச்சி சாலை பகுதியில் இருந்து இப்பகுதிக்கு காய்கறிகள் கொண்டு வரும் விவசாயிகளும், காய்கறி வாங்க வரும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்வதாக கருத்து தெரிவிக்கின்றனர்.
பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தென்காசியில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய விஜய் ரசிகர்கள்