ETV Bharat / city

தண்ணீர் பிரச்னை: சட்டப்பேரவையை கூட்ட வேண்டும்: வீரமணி வலியுறுத்தல் - தண்ணீர் பிரச்சினையை தீர்க்க சட்டப்பேரவையை கூட்ட வேண்டும்

திருச்சி: தண்ணீர் பிரச்னையை தீர்க்க உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.

வீரமணி
author img

By

Published : Jun 17, 2019, 1:08 PM IST

திராவிடர் கழக மாநில தொழிலாளர் அணி பேரவை கலந்துரையாடல் கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. இதற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ஜெயக்குமார், வழக்கறிஞர் அணி தலைவர் வீரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் வீரமணி பேசுகையில், ”அமைப்புகளில் பெண்களுக்கு பொறுப்பு வழங்க வேண்டும். அவர்கள் இத்தகைய பொறுப்புகளை ஏற்க தயாராக இருக்கிறார்கள். தொழிற்சங்கத்தை நம்பி பலர் கட்சி நடத்துகின்றனர். ஆனால் திராவிடர் கழகம் அப்படி இல்லை. திராவிடர் கழகம் அமைப்பு தனித்தன்மையானது. போனஸ், கூலி உயர்வு ஆகியவை கேட்டு மட்டும் திராவிடர்கள் தொழிற்சங்கம் போராடுவது கிடையாது.

இக்கூட்டத்திற்கு முன்னதாக வீரமணி செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தண்ணீர் பிரச்னையை தீர்க்க போர்க்கால நடவடிக்கை தொடங்குவதற்கு முன்னால் அனைத்துக் கட்சி கூட்டத்தை அல்லது சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும். அதில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தக் கூடிய வகையில் எங்கெல்லாம் தண்ணீர் கிடைக்கவில்லையோ அங்கெல்லாம் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சாதாரணமான ஊற்றுகளில் தண்ணீர் எடுப்பதை அதிகாரிகள் தலையிட்டு தடுக்கிறார்கள் என்று செய்திகள் வந்துள்ளன. இவைகளையெல்லாம் சம்பந்தப்பட்ட அமைச்சர்களும், முதலமைச்சரும் தனி கவனம் செலுத்தி ஈடுபாட்டுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Intro:தண்ணீர் பிரச்சினையை தீர்க்க உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்

Body:திருச்சி:
தண்ணீர் பிரச்சனையை தீர்க்க உடனடியாக சட்டமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
திராவிடர் கழக மாநில தொழிலாளர் அணி பேரவை கலந்துரையாடல் கூட்டம் இன்று திருச்சியில் நடந்தது. திராவிடர் கழக தலைவர் கி வீரமணி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ஜெயக்குமார், வழக்கறிஞர் அணி தலைவர் வீரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் வீரமணி பேசுகையில், அமைப்புகளில் பெண்களுக்கு பொறுப்பு வழங்க வேண்டும். அவர்கள் இத்தகைய பொறுப்புகளை ஏற்க தயாராக இருக்கிறார்கள். தொழிற்சங்கத்தை நம்பி பலர் கட்சி நடத்துகின்றனர். ஆனால் திராவிடர் கழகம் அப்படி இல்லை. திராவிடர் கழகம் அமைப்பு தனித்தன்மையானது. போனஸ், கூலி உயர்வு ஆகியவை கேட்டு மட்டும் திராவிடர்கள் தொழிற்சங்கம் போராடுவது கிடையாது. போனஸ் மற்றும் சம்பளத்தை உருப்படியாக செலவு செய்து சேமிக்கும் பகுத்தறிவை திராவிடர் கழக தொழிற்சங்கம் சொல்லித் தருகிறது. பெரியார் கூறியபடி தொழிலாளர்களுக்கு லாபத்தில் பங்கு வழங்கும் முறை தற்போது படிப்படியாக வந்துகொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் இந்த முறை மட்டுமே இருக்கும் என்றார்.
இந்த கூட்டத்தில், திருவெறும்பூர் பெல் நிறுவன ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அமைப்புசாரா நலவாரிய தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டும். 8 வழி சாலை திட்டத்தை கைவிட வேண்டும். பேருந்துகளில் கடவுள் படங்களை நீக்கிட வேண்டும். நீட் தேர்வை கைவிட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை கைவிட வேண்டும். மத்திய அரசு பணிகளில் தமிழ் நாட்டினருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்திற்கு முன்னதாக வீரமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
தண்ணீர் பிரச்சனையை தீர்க்க போர்கால நடவடிக்கையை தொடங்குவதற்கு முன்னால் அனைத்து கட்சி கூட்டத்தை அல்லது சட்டமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும். அதில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த கூடிய வகையில் எங்கெல்லாம் தண்ணீர் கிடைக்கவில்லையோ அங்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சாதாரணமான ஊற்றுகளில் தண்ணீர் எடுப்பதை அதிகாரிகள் தலையிட்டு தடுக்கிறார்கள் என்று செய்திகள் வந்துள்ளது. இவைகளையெல்லாம் சம்பந்தப்பட்ட அமைச்சர்களும், தமிழக முதல்வரும் தனிக்கவனம் செலுத்தி ஈடுபாட்டுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக என்னென்ன திட்டங்களை மேற்கொள்ள போகிறோம் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதன் மூலம் தான் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த முடியும். ஒரு புறம் வறட்சி, இன்னொரு பக்கம் நம்பிக்கை இல்லாமல் ஏழை எளிய மக்கள் பணம் கொடுத்தும் நல்ல தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை உள்ளது. தமிழகம் இதுவரை இதுபோன்ற சூழ்நிலையை சந்தித்தது கிடையாது. வரும் முன்னர் காக்கக்கூடிய திட்டங்கள் நிறைவேற்றாத காரணத்தால் இது போன்ற பிரச்சனைகள் எழுந்துள்ளது. இதை பொதுப் பிரச்சினையாக யாக்கி, அரசியல் பார்க்காமல் மக்களின் தாகத்தை தீர்க்க வேண்டும். தண்ணீர் தண்ணீர் என்று அலறிக்கொண்டு கண்ணீர் விட்டுக் கொண்டு இருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என்றார்.

Conclusion:மக்களின் தண்ணீர் பிரச்சினைகள் அரசியல் பார்க்க கூடாது என்று கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.