ETV Bharat / city

ஒளியால் பிரகாசம் அடைந்த தமிழ்நாடு... கார்த்திகை தீபத்திருநாள் கோலாகல கொண்டாட்டம்! - karthigai deepam celebration in tamilnadu

தமிழ்நாடு முழுவதும் நேற்று கார்த்திகை தீபத்திருநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வுகளின் தொகுப்பு உங்கள் பார்வைக்காக...

கார்த்திகை தீபம்  கார்த்திகை தீபத்திருநாள்  தீபத்திருநாள்  karthigai deepam celebration in tamilnadu  thiruvannamalai karthigai deepam
கார்த்திகை தீபத்திருநாள்
author img

By

Published : Dec 11, 2019, 1:56 PM IST

கார்த்திகை தீபம் என்பது கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் ஒருசேர்ந்த திருக்கார்த்திகை நாளில் இந்துக்கள் தங்கள் இல்லங்களிலும், கோயில்களிலும் தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும். பஞ்சபூத தலங்களில் நெருப்பு தலமாக விளங்கும் "தீ" தலம் என்று அழைக்கப்படும் திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா முழங்க நேற்று தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை புண்ணிய பூமி. ஆன்மிக பூமி. யோகிகள், ஞானிகள், சித்தர்கள் வாழ்ந்த பூமியாகப் பார்க்கப்படுகிறது. தன்னை நாடி வந்தவர்க்கெல்லாம் அருள் வழங்கும் மலையாக கொண்டாடப்படும் திருவண்ணாமலை சாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி அனைவருக்கும் முக்தி தரும் மலையாகும். உலகப் புகழ் பெற்ற தீப தரிசனம், பௌர்ணமி புகழ் கிரிவலம் வரும் மலை திருவண்ணாமலையாகும். இந்நாளில் நாம் விளக்கு ஏற்றுவதற்காக ஊற்றப்படும் எண்ணையும், அதில் இடப்படும் திரியும் தன்னைக் கரைத்துக் கொண்டு நமக்கு பிரகாசமான ஒளியை தருகிறது. இதுபோல மனிதர்களும் தன்னலம் பாராமல் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதை இந்த கார்த்திகை தீபம் உணர்த்துகிறது.

மகா தீபத் திருவிழாவில் போலீஸ் அலட்சியம் - பக்தர்கள் குற்றச்சாட்டு

நேற்று திருக்கார்த்திகை தீபம் திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதிலும் திருக்கார்த்திகை தீபமேற்றி கொண்டாடப்பட்டது. அதன் கொண்டாட்ட நிகழ்வுகள் கிழ்வருமாறு:

செங்கல்பட்டு மாவட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் அச்சரப்பாக்கம், மதுராந்தகம், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்ட கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாட்டம்

திருவள்ளூர் மாவட்டம்

முருகப்பெருமானின் ஐந்தாம் படைவீடாக போற்றப்படும் திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மூலவர் கடவுளுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை பூஜைகள் செய்யப்பட்டு தங்க, வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. மாலையில் வானவேடிக்கை முழங்க, மலைக்கோயிலின் மாடவீதியில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானை சமேத உற்சவர் சுப்பிரமணிய சுவாமி எழுந்தருளி செக்கப்பானையில் திருக்கோயில் பிரதான அர்ச்சகர் மகா தீபம் ஏற்றி வைத்தார். மகா தீபத் திருவிழாவில் காலை முதல் மாலை வரை ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று முருகப்பெருமானை வழிபட்டனர்.

திருவள்ளூர் மாவட்ட கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாட்டம்

தருமபுரி மாவட்டம்

தருமபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை 4.30 மணிக்கு பரணி தீபம் ஏற்பட்டது. தொடர்ந்து மல்லிகார்ஜூனேஸ்வரருக்கு விசேஷ அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டன. மாலை 6 மணிக்கு கோயில் வளாகத்தில் மகாதீபம், லட்ச தீபம் ஏற்றப்பட்டது. கோயில் முழுவதும் அகல் விளக்கால் பக்தர்கள் தீபமேற்றி வழிபட்டனர்.

தருமபுரி மாவட்ட கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாட்டம்

திருவாரூர் மாவட்டம்

கார்த்திகை தீபத் திருநாளை கொண்டாடும் வகையில் அவல், பொரி, விளக்குகளால் தங்கள் வீடுகளை அலங்கரித்தனர். மேலும் தியாகராஜர் திருக்கோயிலில் தீபத்திருநாள் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தியாகராஜர் கிழக்கு கோபுர வாசல் எதிர்ப்புறம் சொக்கப்பனை நிகழ்ச்சியும் இடம்பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதுபோன்று அருகில் உள்ள பழனி ஆண்டர் கோயிலிலும் சொக்கபனை நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாட்டம்

நாமக்கல் மாவட்டம்

பஞ்சபூதங்களில் நெருப்பிற்குரிய தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மகாதீபம் இன்று மாலை 6 மணியளவில் ஏற்றப்பட்டது. அதன்பின்னர் நாமக்கல்லில் ராமாபுரபுதூரில் பெண்கள் தங்களது வீடுகளில் வரிசையாக மண்ணால் செய்யப்பட்ட அகல்விளக்கு, குத்துவிளக்குகளில் நல்லெண்ணெய் தீபமேற்றியும், கோயில்களில் சிறப்புப் பூஜைகள் செய்தும் வழிப்பட்டனர்.

நாமக்கல் மாவட்ட கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாட்டம்

கரூர் மாவட்டம்

நகரின் மையப்பகுதியில் உள்ள மாரியம்மன் ஆலயத்தின் அருகே வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் பரிவார தெய்வங்களில் ஒன்றான, அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி முருகனுக்கு கார்த்திகை தீபத்திருநாளையொட்டி காலைமுதல் இரவு வரை பல்வேறு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடைபெற்றன.

கரூர் மாவட்ட கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாட்டம்

ஈரோடு மாவட்டம்

கோட்டை ஆருத்ர கபாளீஸ்வரர் கோயிலில் விநாயகர், சுப்பரமணியர், சோமஸ்கந்தர், கிரியாசக்தி, சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு, 16 வகையான திரவியங்களில் அபிேஷகம் செய்யப்பட்டது. திருக்கார்த்திகை நட்சத்திரத்தையொட்டி மூலவருக்கு அவல், பொரி சாற்றுமுறை செய்யப்பட்டது. மாலையில் பஞ்ச மூர்த்திகளுக்கு அலங்காரமும், தீபாராதனையும் காண்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கோயில் சிவாச்சாரியார் கோவில் தீப கம்பத்தில் மகா தீபத்தை ஏற்றினார். அதையடுத்து கோயில் முன் வைக்கப்பட்டிருந்த செக்கப்பனை கொழுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

ஈரோடு மாவட்ட கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாட்டம்

பெரம்பலூர் மாவட்டம்

பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூரில் உள்ளது பிரம்ம ரிஷிமலை. மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற பிரம்ம ரிஷி மலையில் கார்த்திகை தீப திருவிழாவை யொட்டி மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது. பிரமாண்ட கொப்பரையில் 1008 மீட்டர் திரியுடன், 3000 கிலோ நெய், 50 கிலோ சூடம் ஆகியவை போடப்பட்டு கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இந்த விழாவில் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளானோர் கலந்துகொண்டனர்.

பெரம்பலூர் மாவட்ட கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாட்டம்

மதுரை மாவட்டம்

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இம்மாதம் 2ஆம் தேதி கார்த்திகை மகா தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொர்ந்து மகா தீபம் ஏற்றுவதற்காக திருவண்ணாமலையில் இருந்து ஒரு குழு திருப்பரங்குன்றம் பகுதிக்கு வந்து தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தது. அதனையடுத்து மாலை 6.00 மணியளவில் திருக்கோயிலில் உள்ள உற்சவர் சன்னதியில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து உற்சவர் சன்னதியில் பால தீபம் ஏற்றிய அதே நேரத்தில் 180 அடி உயரமுள்ள திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள விநியாகர் கோயில் மேல் உள்ள மேடையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

மதுரை மாவட்ட கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம்

குமரி பகவதி அம்மன் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு அதிகாலையில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜை, விசுவரூப தரிசனம் போன்றவை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு குமரிக் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறைக்கு கோயிலின் மேல்சாந்தி ராதாகிருஷ்ணன், தனிப்படகில் சென்று பாறையில் உள்ள பகவதி அம்மன் கால் பாதத்திற்கு அபிஷேகம் செய்து பூக்களால் அலங்கரித்து பூஜைகள் செய்து, கார்த்திகை மகாதீபம் ஏற்றினார்.

கன்னியாகுமரி மாவட்ட கார்த்திகை தீபத்திருநாள் கொண்டாட்டம்

Intro:Body:

karthigai deepam

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.