ETV Bharat / city

திருச்சி கோட்டம்... கிடைக்காதவர்கள் வாட்டம்... - திருச்சி கோட்டத் தலைவர்

திருச்சி மாநகராட்சியில் கோட்டத் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேதி குறித்த சில தகவல்கள் பற்றிக் காண்போம்.

திருச்சி: கோட்டம்... கிடைக்காதவர்கள் வாட்டம்...

author img

By

Published : Mar 13, 2022, 5:20 PM IST

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த மாதம் (பிப். 19ஆம் தேதி) நடைபெற்றது. இதில் தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்கள் மார்ச் 2ஆம் தேதி பதவியேற்றுக்கொண்டனர். ஒரு வழியாக மார்ச் 4ஆம் தேதி மேயரும், துணைமேயரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அடுத்த அதகளம் ஆரம்பமாகிவிட்டது. ஆமாங்க, கோட்டத் தலைவர்கள் பதவிக்கான குஸ்தி தொடங்கிவிட்டது.

திருச்சி மாநகராட்சி நான்கு கோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம், அரியமங்கலம், கோ-அபிஷேகபுரம், பொன்மலை. ஆனால், தற்பொழுது புதியதாக இணைந்த பகுதிகளையும் சேர்த்து மண்டலம் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து எனப் பெயர் மாற்றம் செய்யப்போவதாகக் கூறப்படுகிறது.

கோட்டத் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேதியாக நாளை(மார்ச் 14) நிர்ணயம் செய்திருக்கிறார்கள் என்கின்றனர், ஒரு தரப்பினர். மற்றொரு தரப்பினரோ 18ஆம் தேதி என்கின்றனர்.

ஆளும்கட்சியான திமுக திருச்சியில் பெரும்பான்மை பலத்தையும் தாண்டி வெற்றியை ருசித்து உள்ளதால் நான்கு கோட்டத்தலைவர்களின் பதவியையும் தானே வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறது. ஆனால், காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய இரண்டு கட்சிகளும் தங்கள் கட்சியினருக்கு கோட்டத்தலைவர் பதவி வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு காத்திருக்கின்றன.

திருச்சி: கோட்டம்... கிடைக்காதவர்கள் வாட்டம்...
திருச்சி கோட்டம்... கிடைக்காதவர்கள் வாட்டம்...

ஐந்தாவது கோட்டம் எதுவாக இருக்கும்?

இது ஒருபுறம் இருக்க இந்தப் பதவிகளைக் கைப்பற்ற சீனியர் திமுக கவுன்சிலர்கள் தலைமைக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளார்களாம். நேரு குழுவில் இரண்டு என்றும், மகேஷ் குழுவில் இரண்டு என்றும் முடிவாகி இருப்பதாகக் கூறுகிறார்கள். மகேஷ் குழுவில் ஒன்று மதிவாணனுக்கு, மற்றொன்று தர்மராஜூக்கு எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார்கள்.

நேரு தரப்பிலோ, 'சிவா மனசுல சக்தினு' சட்டுனு சொல்லிடலாம். ஆனால், 'இவர் மனசுல யாரு' எனக் கணிப்பது அவ்வளவு எளிதல்ல என்பவர்கள் ஸ்ரீரங்கம் பகுதிக்கு கிட்டத்தட்ட ஆண்டாள் ராம்குமார் பெயர் முடிவாகிவிட்டது என்று கூறினாலும், காங்கிரஸ் ஒன்றே ஒன்றாவது கேட்டு மன்றாடுவதாலும் ஸ்ரீரங்கம் கோட்டத்தில் திமுகவில் அதிக அளவில் பெண்களே மாமன்ற உறுப்பினர்களாக உள்ளதாலும், காங்கிரஸைச் சேர்ந்த ஜவஹருக்கு கொடுத்துவிடலாம் என நினைக்கிறாராம், நேரு.

ஆனால், வெறும் ஐந்தே ஐந்து ஓட்டு கூடுதலாக பெற்றவருக்கா பதவி என கொதிக்கிறதாம், மற்ற தரப்பு. மற்றொரு கோட்டத்திற்கு யார் என்பதைக் கணிக்க முடியவில்லை என்பதோடு பட்டியலை நீட்டிக்கொண்டே போகிறார்கள். முத்துச்செல்வம், காஜா மலை விஜய், கவிதா செல்வம், விஜயா ஜெயராஜ் என்றும் சொல்கிறார்கள்.

அதுசரி அந்த ஐந்தாவது கோட்டம் எதுவாக இருக்குமாம், இப்போதைக்கு நான்கு கோட்டங்கள்தானாம். பின்னால் அதைப்பற்றி பேசிக்கொள்ளலாம். ஐந்தாவது கோட்டத்திற்கான அலுவலகம் கட்டி முடிக்கப்பட வேண்டும். துணை ஆணையர், அலுவலர்கள் எனப்பெரிய பட்ஜெட் தேவைப்படும் என்பதால் அநேகமாக அடுத்த தேர்தல் வரும்பொழுது புதியதாக இணைக்கப்பட்ட பகுதிகளை சேர்த்து ஐந்து மண்டலங்களாக்கி மண்டலத்திற்கு 20 வார்டுகள் என நிர்ணயிக்கத் திட்டமாம்.

கோட்டத் தலைவர் யார்? என்ற குழப்பத்திற்கு வரும் மார்ச் 14 அல்லது 18ஆம் தேதி விடை தெரியலாம் என்கிறார்கள். ஆக மீண்டும் லக லக லக அப்படித்தானே.

இதையும் படிங்க: '4 மாநிலங்களில் பாஜக வெற்றிக்கு காரணம் என்ன? - பழ.நெடுமாறன் பேச்சு'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.