ETV Bharat / city

முருகன் சிலை கண் திறந்ததா? அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

திருச்சி அருகே வாத்தியார்குளத்தில் கல்யாணமுருகன் திருக்கோயிலில் உள்ள முருகன் சிலை கண் திறந்ததாக தகவல் பரவியதால் அங்கு பக்தர்கள் கூட்டம் நிரம்பி வருகிறது.

முருகன் சிலை கண் திறந்ததா? அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!
முருகன்
author img

By

Published : Jun 22, 2022, 3:27 PM IST

திருச்சி மேலகல்கண்டார் கோட்டைப்பகுதி கம்பி கேட் அருகே வாத்தியார்குளத்தில் கல்யாணமுருகன் திருக்கோயில் உள்ளது. இக்கோயில் சுமார் 40ஆண்டுகளாக அங்கு உள்ளது.

இந்நிலையில் நேற்று (ஜூன் 21) கோயிலை திறந்து வழக்கம்போல், உள்ளே செல்லும்போது அந்த கல்யாண முருகன் சிலையில் மனிதர்கள் போலவே கண்களை திறந்ததாக சிலர் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, அங்கு ஏராளமான பக்தர்கள் சென்று பயத்துடனும் பக்திபரவசத்துடனும் சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் இந்த தகவல் அப்பகுதியில் உள்ள மக்களுக்குத் தெரிய வரவே, கோயிலுக்குப் பக்தர்கள் தொடர்ந்து வருகை தந்து முருகனை தரிசித்து சென்றனர்.

முருகன் சிலை கண் திறந்ததா? அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!

இதையும் படிங்க: 'சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிற்றம்பல மேடையில் ஏறி பக்தர்கள் வழிபட தீட்சிதர்கள் அனுமதிக்க வேண்டும்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.