திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கே.பெரியபட்டி அருகேயுள்ள வடக்கு சேர்ப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (26) பெயின்டராக வேலை பார்த்து வரும் இவர் நேற்று மாலை மது போதையில் வீட்டிற்கு வந்து வீட்டில் இருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டதையடுத்து அவரது அப்பா ராஜேஷ்குமாரை அடித்துள்ளார்.
இதில் காயமடைந்த ராஜேஷ்குமார், அவரது அப்பா உட்பட குடும்பத்தினர் அனைவரையும் வீட்டிற்குள் வைத்து பூட்டிவிட்டு உங்க அப்பாவை என்ன செய்கிறேன் பார் என்று வீட்டிற்கு வெளியே கட்டிலில் படுத்திருந்த அவரது தாத்தா வேலுவை (85) ஆயுதங்களைக் கொண்டு பலமாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த வேலுவை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தபோது மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மணப்பாறை காவல் துறையினர் ராஜேஷ்குமாரை கைது செய்தனர். மது போதையில் பேரனே தன் தாத்தாவை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: