திருச்சி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது, இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்கள் தொற்று பாதித்துள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டு அடைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா தொற்றை கட்டுப்படுத்த இந்திய மருத்துவ கழகத்தின் திருச்சி கிளை, திருச்சி மாவட்டம் முழுவதும் இரண்டு வார காலத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்துள்ளது.
மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, மேலும் கரோனா தொற்றால் ஐந்து மருத்துவர்கள் இறந்துள்ளனர், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள் உட்பட 75 விழுக்காடு பேர் பாதித்துள்ளனர்.
எனவே இந்திய மருத்துவ கழகதின் திருச்சி கிளை பரிந்துரை படி திருச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும், மேலும் நீதிமன்றம் தாமாக முன்வந்து மருத்துவ சிகிச்சையை கண்காணிப்பது போல், திருச்சி மாவட்டத்திலும் மருத்துவ சிகிச்சையை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும், எனவே திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக ஆகாமல் இருக்க உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து திருச்சி மாவட்டத்தில் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க உத்தவிட வேண்டும் என மூத்த வழக்கறிஞர் ராஜகோபால் முறையீடு செய்துள்ளார்.
இதற்கு நீதிபதிகள், மனுதாரர் கோரிக்கை சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்தால் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும்” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இட ஒதுக்கீடு விவகாரத்தை விசாரிக்க சலோனி குமார் வழக்கு தடையாக இல்லை!