ETV Bharat / city

முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ லோகாம்பாள் காலமானார்! - லால்குடி சட்டப் பேரவை தொகுதி

முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ லோகாம்பாள் புற்றுநோயால் அவதியுற்ற நிலையில், சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை காலமானார்.

முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ லோகாம்பாள் காலமானார்..

author img

By

Published : Oct 29, 2021, 2:01 PM IST

திருச்சி: லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் வசித்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ லோகம்பாள் (68) உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை(அக்.25) இரவு காலமானார்.

இவர் காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாவட்ட மகளிரணி தலைவியாக பதவி வகித்தவர். கடந்த 1991 ஆம் ஆண்டில் லால்குடி சட்டப் பேரவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டார்.

இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரும், தற்போதைய திமுக முதன்மை செயலாளரும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேருவை தோல்வி அடைய செய்தவர்.

தொடர்ந்து 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை லால்குடி சட்டப் பேரவை உறுப்பினராக பதவி வகித்தார். அதன் பிறகு கட்சி பணியில் ஈடுபட்ட அவர் இந்நாள் வரை காங்கிரஸ் கட்சியில் இருந்துள்ளார்.

லோகம்பாள் புற்றுநோயால் அவதியுற்ற நிலையில், திருச்சியில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தவர், சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை காலமானார். இவருக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

இதையும் படிங்க:ஃபேஸ்புக் 'Meta' எனப் பெயர் மாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.