திருச்சி காஜாபேட்டை பெல்ஸ் கிரவுண்ட் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் கிருஷ்ணகுமார் (30). இவரது மனைவி கனகவல்லி. இவர்களுக்கு நான்காம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். இந்நிலையில், கிருஷ்ணகுமாருக்கும் அவரது வீட்டின் அருகே வசிக்கும் திலகவதி என்ற பெண்ணுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது.
இது மனைவி கனகவல்லிக்குத் தெரியவரவே, இருவரையும் அவர் கண்டித்துள்ளார். இந்நிலையில், குடிபோதையில் வீட்டுக்கு வந்த கிருஷ்ணகுமார், அவரது மகளிடம், ‘திலகவதியை நம் வீட்டிற்கு அழைத்து வந்து நம்முடன் சேர்ந்துக்கொள்ளலாம் எனக் கூறியுள்ளார். இதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்தார். இதனால், ஆத்திரமடைந்த கிருஷ்ணகுமார் பழுக்கக் காய்ச்சிய கத்தியை எடுத்து சிறுமிக்கு சூடு வைத்துள்ளார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கனகவல்லி, தனது மகளை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர், உடனடியாக அவர் இதுகுறித்து பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கிருஷ்ணகுமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பாடாய்படுத்தும் திமுக பஞ்சாயத்து தலைவர் - நியாயம் கேட்டு சொந்தக்கட்சியினரே தர்ணா!