ETV Bharat / city

'பொறியியல் பயில்வோருக்கு அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்' - engineering studies

திருச்சி:பொறியியல் கல்வி பயில்வோருக்கு ஆண்டுதோறும் வேலை வாய்ப்புகள் அதிகரித்துவருகிறது என்று சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

engineering college forum meet
author img

By

Published : Jun 25, 2019, 8:18 AM IST

தமிழ்நாடு சுயநிதி பொறியியல், கலை - அறிவியல் கல்லூரிகள் கூட்டமைப்பு சார்பில் "தொலைநோக்கு 2019" என்ற கருத்தரங்கம் நேற்று திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடந்தது.

அதன்பின் அந்தக் கூட்டமைப்பின் தலைவர் முனிரத்தினம், செயலாளர் செல்வராஜ், கே7 நிறுவன முதன்மைச் செயல்அலுவலர் புருஷோத்தமன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள், "மதுரை, சென்னை, கோவையிலும் இது போன்ற கருத்தரங்கம் நடத்தப்பட்டு பொறியியல் படிப்புக்கான வேலைவாய்ப்புகள் குறித்து எடுத்துக் கூறப்படும். பெருநிறுவனங்களில் 45 லட்சம் பொறியாளர்கள் வேலை பார்க்கின்றனர்.

அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் 55 விழுக்காடு மென்பொருள்களை தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகள்தான் உருவாக்கின. கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு வளாக நேர்காணல் (கேம்பஸ் இன்டர்வியூ) மூலம் பணி கிடைத்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு வளாக நேர்காணல் மூலம் வேலை கிடைத்தது.

ஆண்டுதோறும் தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்பு அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அவர்களும் புதிய புதிய தொழில்நுட்பத்தை ஆண்டுதோறும் அறிமுகம் செய்கிறார்கள். அதற்கு ஏற்றாற்போல் பொறியியல் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அனைத்துக் கல்லூரிகளிலும் அளிக்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

'பொறியியல் படிப்புக்கு மவுசு குறையவில்லை'-கல்லூரி கூட்டமைப்பு

கடந்த நான்கு ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை குறைவாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. இதற்குக் காரணம் பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது என்ற தவறான பரப்புரை ஊடகங்கள் மூலம் பரவுவதால் லட்சக்கணக்கானோர் மனதில் பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது என்ற எண்ணம் உருவாகிவிடுகிறது.

அதோடு பொறியியல் படித்தவர்கள் துப்புரவுப் பணிக்கு விண்ணப்பித்து இருப்பதாகவும் தகவல் பகிரப்படுகிறது. இதனால் இந்தத் துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் சூழ்நிலை உள்ளது. பெரிய பெரிய நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் பொறியியல் படித்தவர்கள்தான் இருக்கிறார்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும்" என்றனர்.

Intro:பொறியியல் கல்வி பயில்வோருக்கு ஆண்டுதோறும் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது என்று சுயநிதி பொறியியல் கல்லூரி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Body:திருச்சி:
பொறியியல் கல்வி பயில்வோருக்கு ஆண்டுதோறும் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது என்று சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சுயநிதி பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கூட்டமைப்பு சார்பில் "தொலைநோக்கு 2019" என்ற கருத்தரங்கம் இன்று திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டமைப்பு தலைவர் முனிரத்தினம், செயலாளர் செல்வராஜ், ஐசிடி அகாடமி செயல் துணைத் தலைவர் அன்புத்தம்பி, ஸ்டாண்டர்டு சார்டர்டு ஜிபிஎஸ் நிறுவன முதுநிலை மேலாளர் ராஜகோபாலன், கே7 கம்ப்யூட்டிங் நிறுவன முதன்மை செயல் அதிகாரி புருஷோத்தமன் மற்றும் அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்கக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்தக் கருத்தரங்கில் பல்வேறு பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரி நிர்வாகிகள், முதல்வர்கள், பேராசிரியர்கள், பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
அப்போது கூட்டமைப்பு தலைவர் முனிரத்தினம், செயலாளர் செல்வராஜ், கே7 நிறுவன முதன்மை செயல் அதிகாரி புருஷோத்தமன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில்,
பெற்றோரும், மாணவர்களும் பயன்பெறும் வகையில் இந்த கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. மதுரை, சென்னை, கோவையிலும் இது போன்ற கருத்தரங்கம் நடத்தப்பட்டு பொறியியல் படிப்புக்கான வேலைவாய்ப்புகள் குறித்து எடுத்துக் கூறப்படும். கார்ப்பரேட் நிறுவனங்களில் 45 லட்சம் பொறியாளர்கள் வேலை பார்க்கின்றனர். அது தவிர பல துறைகளிலும் பொறியியல் மாணவர்கள் பணியாற்றி வருகின்றனர். அமெரிக்காவுக்கு 55 சதவீத மென்பொருள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.இதற்கும் பொறியாளர்கள் தான் காரணம். இவர்களை எல்லாம் தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் தான் உருவாக்கின. கடந்த ஆண்டு தமிழகத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் பணி கிடைத்து உள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் வேலை கிடைத்தது.
இதுதவிர ஆயிரக்கணக்கானோர் தொழில்முனைவோராக உருவாக்கியுள்ளனர். படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டு கடந்த 30 ஆண்டுகளாக உள்ளது. ஆண்டுதோறும் தொழில் நிறுவனங்களின் எதிர்பார்ப்பு அதிகமாகி கொண்டே செல்கிறது. அவர்களும் புதிய புதிய தொழில்நுட்பத்தை ஆண்டுதோறும் அறிமுகம் செய்கிறார்கள். அதற்கு ஏற்றார்போல் பொறியியல் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அனைத்து கல்லூரிகளிலும் அளிக்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. முதல் ஆண்டு முதலே இந்த பயிற்சி தொடங்கப்படுகிறது. படிப்பு என்பது அடிப்படை மட்டுமே. அதன் பின்னர் அந்தந்த் நிறுவனங்களுக்கு ஏற்றார் போல் அந்த நிறுவனமே பயிற்சி கொடுத்துக் கொள்கின்றது. அதனால் பொறியியல் படித்தவர்களுக்கு வேலை இல்லை என்று கூற முடியாது. நாட்டிலேயே கல்வித்துறையில் தமிழகம் தான் எடுத்துக்காட்டாக உள்ளது. இந்தத் துறையில் உள்ள குறைபாடுகள் மட்டுமே சுட்டிக்காட்டப்படுகிறது. அதிலுள்ள நிறைகளை யாரும் கூறுவது கிடையாது. அப்போது தான் வளர்ச்சி தரமான வள்ர்ச்சி இருக்கும். கடந்த 4 ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை குறைவாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது என்ற தவறான பிரச்சாரம் பகிரப்படுகிறது. ஊடகங்கள் மூலம் இந்த பிரச்சாரம் பரவுவதால் லட்சக்கணக்கானோர் மனதில் பொறியியல் படித்தால் வேலை கிடைக்காது என்ற எண்ணம் உருவாகி விடுகிறது. அதோடு பொறியியல் படித்தவர்கள் துப்புரவு பணிக்கு விண்ணப்பித்து இருப்பதாகவும் தகவல் பகிரப்படுகிறது. இதனால் இந்தத் துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் சூழ்நிலை உள்ளது. பெரிய பெரிய நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் பொறியியல் படித்தவர்கள் தான் இருக்கிறார்கள் என்பதை அனைவரும் உணர வேண்டும் என்றனர்.

Conclusion:ஆண்டுதோறும் தொழில் நிறுவனங்களை புதுப்புது தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்யப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல் பொறியியல் மாணவர்களுக்கு முதல் ஆண்டு முதலே திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது என்று கூறினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.