ETV Bharat / city

Rajinikanth birthday: மிமிக்ரி மூலம் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த விஜய் - திரையுலகில் சூப்பர்ஸ்டார்

ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி கல்லூரி மாணவர் ஒருவர், தனது கண்ணைக்கட்டியவாறு ரஜினியின் வீடியோவிற்கேற்ப பல்வேறு மொழிகளில் பேசி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

கல்லூரி மாணவன்
கல்லூரி மாணவன்
author img

By

Published : Dec 12, 2021, 6:00 PM IST

திருச்சி: திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படுபவரும், திரைத்துறையில் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதுபெற்றவருமான நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளான டிசம்பர் 12ஆம் தேதியான இன்று(டிச.12) கொண்டாடப்படுவதையொட்டி, அவரது ரசிகர்கள் மற்றும் திரைத்துறைப் பிரபலங்கள், அரசியல் மற்றும் சமுதாயத் தலைவர்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி, திருச்சியில் கல்லூரி மாணவரும், மிமிக்ரி கலைஞருமான விஜய் என்பவர் தன்னுடைய வாழ்த்துகளை ரசிகனாக, நடிகர் ரஜினிகாந்துக்கு சமர்ப்பிக்கும் வகையில், தனது கண்களைக் கட்டிக்கொண்டு, தனக்குப்பின்னால் திரையில் ஒளிபரப்பாகிய நடிகர் ரஜினியின் முகபாவனைகளுக்கு ஏற்றவாறு, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் மிமிக்ரி செய்து அசத்தினார்.

மிமிக்ரி மூலம் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த கல்லூரி மாணவன்

மேலும் நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருக்கவேண்டும் எனவும்; தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து மக்களை மகிழ்விக்கவேண்டும் என்றும் தனது விருப்பத்தைத் தெரிவித்துக்கொண்டார்.

இவ்வாறு நூதன முறையில் அவர் வாழ்த்திய காணொலி இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இதையும் படிங்க: 'பீஸ்ட்'டில் நடித்து முடித்த விஜய்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.