திருச்சி: தமிழ்நாட்டில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெறுவதால், கடந்த 4ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக, திருச்சி மாநகராட்சி, மாவட்டத்திற்குட்பட்ட 5 நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகளில், 401 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
போட்டியின்றித் தேர்வு
அதில், துறையூர் நகராட்சியில், 10ஆவது வார்டு கவுன்சிலர் முரளி, தா.பேட்டை பேரூராட்சியில் 8ஆவது வார்டு கவுன்சிலர் கருணாநிதி மற்றும் தொட்டியம் பேரூராட்சி 13ஆவது வார்டு கவுன்சிலர் சத்யா ஆகியோர் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இது தவிர, வேட்பு மனுக்கள் வாபஸ் மற்றும் தள்ளுபடிக்குப் பின், திருச்சி மாநகராட்சி, 5 நகராட்சிகள் மற்றும் 14 பேரூராட்சிகளில் 398 பதவிகளுக்கு, மொத்தம் 1,926 பேர் போட்டியிடுகின்றனர்.
இதையும் படிங்க: மாணவர்களை கல்லறைக்கு கொண்டு சென்ற நீட் தேர்வு தேவையா? - முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி