ETV Bharat / city

திருச்சி அருகே 15 ஏக்கரில் 1.5 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்! - திருச்சி அண்மைச் செய்திகள்

இந்தியாவிலேயே முதல் முறையாக, 15 ஏக்கரில் 1.5 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி திருச்சி அருகே தொடங்கப்பட்டுள்ளது.

திருச்சி அருகே 1.5 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி

author img

By

Published : Jan 2, 2021, 6:08 PM IST

திருச்சி: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஒன்றியம், இருங்களூர் ஊராட்சியில், மழையை ஈர்க்கும் வகையில், மியாவாக்கி முறையில் 1.5 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கு ஊராட்சி மன்றத் தலைவர் வின்சென்ட் தலைமையில், ஊர் முக்கியஸ்தர்களுடன் ஆலோசனை செய்து முடிவுசெய்யப்பட்டது.

அதன்படி இருங்களூரில் 15 பரப்பளவில் உள்ள பெரிய ஏரியில், 1.5 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி இன்று தொடங்கியது. இந்த மரம் நடும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் சிவராசு தொடங்கிவைத்தார்.

லால்குடி வருவாய் கோட்டாட்சியர் வைத்தியநாதன், மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் மலர், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், மதன், கிராம நிர்வாக அலுவலர் நடேசன், அலுவலர்கள், பொதுமக்கள் எனக் கலந்துகொண்டு மரம் நடும் பணியில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து, மரம் வளர்ப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் குறும்படம் அக்கிராமத்தில் உள்ள சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரின் செல்போனிற்கும் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையும் படிங்க: காவிரி ஆற்றின் பாசன கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 224 கோடி நிதி ஒதுக்கீடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.