திருப்பூர் கல்லூரி சாலையில் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு விடுதியில் இருந்த மாணவர்களும் அவரவர் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில் விடுதியில் மாணவர்கள் மற்றும் பாதுகாவலர் யாரும் இல்லாத சூழ்நிலையில் இன்று காலை கல்லூரி விடுதியின் 11ஆவது அறையில் இளைஞர் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த இளைஞர் மாஸ்கோ நகர் பகுதியை சேர்ந்த 28 வயதான அருண்குமார் என்பதும் நண்பர்களுடன் கல்லூரி விடுதியின் பின்பக்கமாக வந்து விடுதி அறையில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகித்து அதன் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.