ETV Bharat / city

லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் உள்பட மூவர் கைது

திருப்பூரில் மண்ணெண்ணெய் கிடங்கு காசாளரிடம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் உள்பட மூவரை லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் கைது செய்தனர்.

லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் உள்பட மூவர் கைது
லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் உள்பட மூவர் கைது
author img

By

Published : Aug 6, 2021, 10:39 PM IST

திருப்பூர்: பல்லடத்தை அடுத்த பொங்கலூரிலுள்ள குடிமைப்பொருள் வழங்கல் துறையின் கீழ் அமுதம் மண்ணெண்ணெய் கிடங்கு இயங்கி வருகிறது. இதில் காசாளராக வெங்கடேஷ் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் இந்த மண்ணெண்ணெய் கிடங்கிலிருந்து மாதம் தோறும் 800 ரூபாய் வீதம் மூன்று மாதங்களுக்கும் சேர்த்து 2ஆயிரத்து 400ரூபாயை லஞ்சமாக வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணவேணியிடம் கொடுக்குமாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் வழங்கல் துறையில் பணிபுரிந்து வரும் குடிமைப்பொருள் தனி வருவாய் அலுவலர் கோபிநாத், இடைத்தரகர் ஜெகன் ஆகியோர் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.

லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார்

லஞ்சப் பணத்தை கொடுக்க விருப்பமில்லாத வெங்கடேஷ் இது குறித்து திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து இன்று (ஆக.6) மதியம் காசாளர் வெங்கடேஷ் 2ஆயிரத்து 400 ரூபாய் லஞ்சப் பணத்தை பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து குடிமை பொருள் தனி வருவாய் அலுவலர் கோபிநாதிடம் கொடுக்க முயன்றார்.

லஞ்சம் பெற்ற மூவர் கைது

அப்போது, கோபிநாத் பணத்தை குடிமைப்பொருள் வழங்கல் பெண் தாசில்தார் கிருஷ்ணவேணியிடம் கொடுக்குமாறு கூறியதன் பேரில் வெங்கடேஷ் வட்ட வழங்கல் கிருஷ்ணவேணியிடம் கொடுத்தார்.

அந்த லஞ்சப் பணத்தை பெற்றுக்கொண்ட வட்ட வழங்கல் கிருஷ்ணவேணி அதனை இடைத்தரகராக இருந்து வரும் ஜெகனிடம் கொடுத்தார். அதனைப் பெற்றுக்கொண்ட ஜெகன் லஞ்சப் பணத்தை தனது பேன்ட் பாக்கெட்டில் வைத்தார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி தட்சிணாமூர்த்தி தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறை காவல் துறையினர், அவர்கள் மூவரையும் சுற்றிவளைத்து கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

கடந்த மாதம் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல துணை தாசில்தார் மேகநாதன் 10ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று 2ஆவது முறையாக பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய சோதனையில் வட்ட வழங்கல் பெண் அலுவலர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி ஆணையர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.