ETV Bharat / city

அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகள், தலை ஒன்றுக்கு ரூ.500 வசூல் - scam

திருப்பூர்: அரசு மருத்துவமனை, மகப்பேறு பிரிவில் குழந்தைகள் பிறந்தால், 500 ரூபாய் வரை வசூல் செய்வதாக, மாதர் சங்கம் ஆய்வு செய்து மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகள், தலை ஒன்றுக்கு ரூ.500!
author img

By

Published : Aug 2, 2019, 3:40 AM IST

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில், தினசரி உள்ளூர் நோயாளிகளும், மாவட்டத்தின் ஊரக பகுதியைச் சேர்ந்த உள் - வெளி நோயாளிகள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் மாதர் சங்கத்தினர் ஆய்வு செய்து அறிக்கை ஒன்றைத் தயாரித்து, மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் வழங்கியுள்ளனர்.

அதில், மருத்துவமனையில் மருத்துவம் நன்றாகப் பார்க்கப்படுவதாகவும் , ஆனால் செவிலியர்களும், பணியாளர்களும், நோயாளிகளை அணுகும் முறை கடுமையாக உள்ளதாகவும், காவலாளிகள், பார்வையாளர்களைத் தரக்குறைவாகப் பேசுவதாகவும், குழந்தைகள் பிரிவில், கடும் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல், காயங்களுக்கு கட்டுபோடும் இடத்திலும், பணம் தர வேண்டிய நிலை உள்ளது. மகப்பேறுப் பிரிவில் ஆண், பெண் குழந்தைகள் பிறந்தால் ரூ. 500 வரை பணம் பெறுவதாகவும் , மருத்துவமனையிலிருந்து வெளியேறும்போதும் பணங்கொடுக்க வேண்டி உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் உடனடியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாதர் சங்கத்தினர் மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர்.

Intro:திருப்பூர் அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் குழந்தைகள் பிறந்தால் 500 ருபாய் வரை வசூல் செய்வதாக மாதர் சங்கம் ஆய்வு செய்து மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

Body:திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் தினசரி உள்ளூர் மற்றும் மாவட்டத்தின் ஊரக பகுதியை சேர்ந்த உள் மற்றும் வெளி நோயாளிகள் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் மாதர் சங்கத்தினர் ஆய்வு செய்து அறிக்கை தயாரித்து மருத்துவமனை கண்கானிப்பாளரிடம் வழங்கியுள்ளனர். அந்த அறிக்கையிள் மருத்துவமனையில் மருத்துவம் நன்றாக பார்க்கப்படுவதாகவும் , ஆனால் செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் நோயாளிகளை அணுகும் முறை கடுமையாக உள்ளதாகவும் , செக்யூரிட்டி வேலை செய்பவர்கள் பார்வையாளர்களை தரக்குறைவாக பேசுவதாகவும், குழந்தைகள் வார்டில் கடும் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் ,அதே போல் காயங்களுக்கு கட்டுபோடும் இடத்திலும், பணம் தர வேண்டிய நிலை உள்ளது. பிரசவ வார்டில் ஆண், பெண் குழந்தைகள் பிறந்தால் ரூ. 500 வரை பணம் பெறுவதாகவும் , மருத்துவமனையில் இருந்து வெளியேறும்போதும் பணம்கொடுக்க வேண்டி உள்ளதாகவும் இதையெல்லாம் உடனடியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாதர் சங்கத்தினர் மருத்துவமனை கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.