மத்திய அரசு அமல்படுத்தி உள்ள வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வேளாண் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து இன்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.