ETV Bharat / city

தாய், மகன் இருவரும் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை - Tirupur District News

திருப்பூர்: அவிநாசி அருகே தாய், மகன் இருவரும் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாய், மகன் இருவரும் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை

author img

By

Published : Aug 9, 2020, 3:18 PM IST

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த நல்லகாளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அருக்காணி(75). இவருக்கு கருப்பசாமி(51), மூர்த்தி(45) என இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் கருப்பசாமிக்கு திருமணமாகி மனைவி குழந்தைகளுடன் புளியம்பட்டியில் வசித்து வருகிறார். மூர்த்திக்கு திருமணம் ஆகாமல் தாயுடன் வசித்து வந்தார்.

அருக்காணி சர்க்கரை வியாதியால் கால்களில் காயம் ஏற்பட்ட பல்வேறு உபாதைகளை அனுபவித்து வந்தார். தாய்க்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே திருமணமே செய்து கொள்ளாத மூர்த்தி, அவிநாசியில் பனியன் நிறுவனத்தில் கட்டிங் மாஸ்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக மூர்த்தி காய்ச்சலால் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.

இதனிடையே நேற்று (ஆகஸ்ட் 8) காலை வெகுநேரமாகியும் வீடு திறக்காமல் இருந்ததை கண்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது, தாய், மகன் இருவரும் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து சேயூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், தாய்க்கு சர்க்கரை நோயின் தாக்கம், மகனுக்கு திருமணமாகாத சோகம் என இருவரும் சமீப காலமாக வேதனையில் இருந்ததாகவும், இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என தெரியவந்தது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.