திருப்பத்தூர் மாவட்டத்தை அடுத்த கந்திலி நார்சாம்பட்டி வெங்கட்டனூர் கிராமம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு, சுமார் 200 வருடங்களாக அருள் பாலித்து வரும் ஸ்ரீ பூங்காவனத்தம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் 18 ஊர் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து, வருடா வருடம் மாசி மாதம் பூங்காவனத்தம்மன் திருவுருவ சிலையை தோளின் மீது சுமந்து, 18 ஊர் கிராமத்திற்கு திருவீதி உலா செல்வது வழக்கம்.
இந்தத் திருவிழாவில் அம்மன் வேடம், காளி வேடம் அணிந்து மிகவும் உக்கிரத்துடனும் பக்திப் பரவசத்துடனும் பக்தர்கள் ஆடுவது மெய்சிலிர்க்க வைக்கும் வகையில் இருக்கும். இந்தத் திருவிழாவைக் காண ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவரவர் நேர்த்திக் கடன்களை செலுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பெண் எஸ்பி பாலியல் வழக்கு: சிறப்பு டிஜிபி சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்