கீழ்பவானி பாசன பகுதியில் பாசன வாய்க்காலுக்கு காங்கிரீட் தளம் அமைக்க அதிமுக அரசு முதற்கட்ட பணிகளைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்துக்காக ரூ.709 கோடி ரூபாய் ஒதுக்கீடுசெய்து பல இடங்களில் இதற்கான முதல் கட்ட நடவடிக்கைகள் ஆரம்பமானது.
இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தநிலையில், காங்கயம் அருகே நத்தக்காடையூர் கீழ்பவானி பகுதி விவசாயிகள்,பெண்கள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், நத்தக்காடையூர் பகுதி முழுவதும் கால்வாய் பாசனப் பகுதியில் காங்கிரீட் அமைக்கக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து கடையடைப்பும் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து காவல் துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையும் படிங்க: நெருக்கடி நிலையை எதிர்கொண்டவர்கள் திமுகவினர் - ஆர்.எஸ். பாரதி