திருப்பூரில் நடைபெற்ற திமுகவின் மக்கள் கிராம சபைக் கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திருப்பூர் மத்திய மாவட்டத்திற்குட்பட்ட 50 வார்டுகள், 10 ஊராட்சிகளில் மக்கள் கிராம சபைக் கூட்டம், பொது மக்கள் சந்திப்பு இயக்கங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் லட்சக்கணக்கான மக்கள் அதிமுகவை நிராகரிப்போம் என தீர்மானத்திற்கு வலுசேர்ப்பது போல் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் அனைத்து தரப்பு மக்களும் திமுக ஆட்சி அமையவே விரும்புகின்றனர். திமுக பொறுப்பேற்றவுடன் நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட சிறுபான்மை மக்கள் மீது தற்போது வழக்குப்பதிவு செய்திருப்பது கண்டனத்துக்குரியது. காவல்துறை, இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் காவல் துறையிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
அப்படி இல்லை என்றால் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் வழக்குகள் திரும்பப் பெறப்படும். இதனை தேர்தல் வாக்குறுதியாகவே திமுக தலைவர் ஸ்டாலின் அறிவிப்பார் என்றார்.
இதையும் படிங்க:ஸ்டாலின் பொய்யன் என்பதை வெளிப்படுத்துவேன்': திமுக முன்னாள் எம்.பி.,யின் சர்ச்சை பேச்சு!