தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் 17 கோடி ரூபாய் செலவில் உலகத் தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் 2019ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து மத்திய தொல்லியல் துறையின் திருச்சி மண்டல அலுவலர் 17 ஆண்டுகளுக்குப் பிறகு அகழாய்வுப் பணிகள் இன்று (அக்.11) தொடங்கியது.
உலகில் முதன்முதலில் அகழாய்வு நடத்தப்பட்ட இடம் ஆதிச்சநல்லூர். இங்கு 1876ஆம் ஆண்டு ஜாஹோர் என்பவர் முதன்முதலில் அகழாய்வை மேற்கொண்டார். அதன் பின்னர் 1903-04ஆம் ஆண்டுகளில் அலெக்ஸ்சாண்டர் ரியோ என்பவர் மீண்டும் அகழாய்வை நடத்தினார்.
தமிழர்களின் தொன்மை
அப்போது முதுமக்கள் தாழி, பானைகள், இரும்பு ஆயுதங்கள், சுடுமண் பட்டையங்கள் கிடைத்துள்ளன. இவைகள் சென்னை எழும்பூரிலுள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
அதன் பின் 2004 - 05ஆம் ஆண்டுகளில் தொல்பொருள் ஆய்வாளர் சத்தியமூர்த்தி தலைமையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 160 முதுமக்கள் தாழிகள், மனித எலும்புகள் கிடைத்தன.
இவற்றையெல்லாம் பாதுகாக்கவேண்டும் தமிழர்களின் தொன்மையை மக்கள் அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.
இதுகுறித்து மத்திய தொல்லியல் துறையின் திருச்சி மண்டல கண்காணிப்பாளர் அருண்ராஜ் கூறியதாவது, 'ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி இன்னும் ஓராண்டில் முடிவடையும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கீழடி: 7ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவு