ETV Bharat / city

ஸ்டெர்லைட் ஆலையைத்திறக்கக்கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு - தாமிர உருக்காலை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத்திறக்க வேண்டும் என ஆலையைச் சுற்றியுள்ள 21 கிராமத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 29, 2022, 4:07 PM IST

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க வேண்டும் என ஆலையினைச் சுற்றியுள்ள 21 கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலையைச்சுற்றியுள்ள கிராமங்களான அ.குமரெட்டியாபுரம், மீளவிட்டான், மடத்தூர், பண்டாரம்பட்டி, தெற்கு வீரபாண்டியபுரம், அய்யனடைப்பு, சோரீஸ்புரம், சில்லாநத்தம், தெற்கு சிலுக்கான்பட்டி, வடக்கு சிலுக்கான்பட்டி, ராஜாவின்கோவில், சாமிநத்தம், சில்வர்புரம், புதூர் பாண்டியாபுரம், காயலூரணி, நயினார்புரம் ஆகிய 21 கிராம மக்கள், ஆலையைத் திறக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஆக.29) மனு அளிக்க வந்தனர்.

அப்போது மனு அளிக்க வந்த வழக்கறிஞர் ஜெயம்பெருமாள் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'ஸ்டெர்லைட் ஆலைக்கும் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று அருணா ஜெகதீசன் ஆணையம் கூறியது வரவேற்புக்குரியது. அத்துடன் ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றி வந்த குடும்பத்திற்கும், மக்களுக்கும் வாழ்வாதாரத்திற்கு வழி செய்து வாழ்வில் விளக்கேற்றி வைக்க வேண்டும். ஆகவே, தமிழ்நாடு அரசு ஆலையை உடனடியாகத் திறக்க வேண்டும்' என்றார்.

இதுகுறித்து ஊர் பொதுமக்களுள் ஒருவரான லிங்க வசந்தி கூறுகையில், 'ஸ்டெர்லைட் ஆலையால் எந்தவிதப் பாதிப்பும் இல்லை. எனவே, ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படவில்லை என்பதை நாங்கள் நன்றாக உணர்ந்துள்ளோம். அது மட்டுமின்றி, தூத்துக்குடி வாழ் மக்களுக்கு வேலை கிடைக்க ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்று கூறினார்.

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக்கோரி ஆட்சியரிடம் மனு - வாழ்வாதரத்திற்கு வழி செய்ய கோரிக்கை

கடந்த 2018ஆம் ஆண்டு தூத்துக்குடியில் வேதாந்தாவின் ஸ்டெர்லைட், தாமிர உருக்காலையால் ஏற்பட்டதாகக் கூறப்படும் தொழிற்சாலை மாசுபாட்டிற்கு எதிராகப்பொதுமக்கள் போராடினர். அப்போராட்டத்தின் நூறாவது நாளில், போராட்டக்காரர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது, ஏற்பட்ட கலவரத்தில், போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 17 வயது பெண் உட்பட 11 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர்.

இந்தச்சம்பவம் தமிழ்நாடு மட்டுமில்லாது நாடு முழுவதும் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தநிலையில், அப்போதைய அதிமுக அரசால் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை நடைபெற்று வந்தது. இதனிடையே இது குறித்த விசாரணை அறிக்கையை இவ்வாணையம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராகப் போராடியவர்களை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியது கொடூரமான செயல் என்றும்; சம்பந்தபட்ட 17 போலீசார் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு ஒரு கொடூரமான செயல்... 17 போலீசார் மீது நடவடிக்கைவேண்டும்... நீதிபதி அருணா ஜெகதீசன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.