தூத்துக்குடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார் என்பவரை, கடந்த 2010ஆம் ஆண்டு மே மாதம் அடையாளம் தெரியாத நபர்கள் அடித்துக் கொலை செய்து அவரது உடலை தீ வைத்து எரித்தனர். மேலும், அவருடைய ஆட்டோவையையும் சின்னத்துரை என்பவருக்கு விற்றனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இது தொடர்பாக முத்துக்குமார், ஜெயபாரத், முத்துராஜ் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த தூத்துக்குடி முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி சிவஞானம், குற்றம் சாட்டப்பட்ட முத்துராஜ், முத்துக்குமார், ஜெயபாரத் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனையும், ஆட்டோவை வாங்கிய சின்னத்துரைக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையும் படியுங்க:
#SaveSujith சுஜித்தை மீட்க ட்விட்டரில் கைகோர்க்கும் பிரபலங்கள்!