இதுதொடர்பாக தூத்துக்குடி துறைமுகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
“தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 2019-2020 நிதியாண்டில் 1,447 கப்பல்களை கையாண்டுள்ளது. இது கடந்தாண்டை விட 5.62 % அதிகமாகும். 8.03 லட்சம் சரக்கு பெட்டகங்களை கையாண்டுள்ளது. கப்பல் துறை அமைச்சகம் நிர்ணயம் செய்துள்ள 36 மில்லியன் டன் சரக்கை கையாண்டு சாதனை படைத்துள்ளது. இதனால் துறைமுகத்தின் இயக்க வருவாய் ரூ. 625.08 கோடியாக உயர்ந்துள்ளது.
துறைமுகத்தில் தொழிற்சாலைகள் அமைப்பதற்கு 275 ஏக்கர் பரப்பளவில் சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான ஆணை விரைவில் வழங்கப்படவுள்ளது”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.