தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே உள்ள கோவங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் கடந்த 2012ஆம் ஆண்டு தனது நண்பர்கள் முருகேசன் மற்றும் மோகன் ஆகியோருடன், ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின் இடுகாட்டிலேயே மது அருந்தியுள்ளார். அப்போது, ரவிக்குமார் வைத்திருந்த மது பாட்டிலை போதையில் முருகேசன் உடைத்ததால், ஆத்திரமடைந்த ரவிக்குமார் அவரை அடித்துள்ளார்.
இதிலிருந்தே ரவிக்குமாருக்கும் மற்ற இருவருக்கும் இடையே பகை இருந்துள்ளது. இதனிடையே, கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் தேதி, தனது வீட்டருகே உள்ள கடைக்கு நடந்து செல்லும்போது, ரவிக்குமாரை வழிமறித்து முருகேசனும், மோகனும் அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். இதனை நேரில் பார்த்த ரவிக்குமாரின் மனைவி செல்லத்தாய், சாயர்புரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
எட்டு ஆண்டுகளாக நடைபெற்ற இவ்வழக்கில், தூத்துக்குடி இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ஃபிலிப் நிக்கோலஸ் இன்று தீர்ப்பளித்தார். அதில், குற்றஞ்சாட்டப்பட்ட முருகேசன் மற்றும் மோகனுக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கூடலூர் அருக கல்லூரி மாணவர் தற்கொலை - போலீசார் விசாரணை