ETV Bharat / city

தூத்துக்குடி மாநகராட்சியின் 20ஆவது ஆணையராக சாருஸ்ரீ பொறுப்பேற்பு

author img

By

Published : Jun 19, 2021, 9:49 PM IST

கரோனா கட்டுப்பாட்டுடன் உள்ளதாகவும், சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சி 20ஆவது ஆணையராக சாருஸ்ரீ பொறுப்பேற்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக இருந்த சரண்யா அரி மாற்றப்பட்டு, அண்மையில் சாருஸ்ரீ- புதிய ஆணையராக நியமிக்கபட்டார். இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சியின் 20ஆவது ஆணையராக அவர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சாருஸ்ரீ கூறுகையில், "தூத்துக்குடியில் கரோனா கட்டுப்பாட்டில் உள்ளது என்ற போதிலும் பொதுமக்கள் சமூக இடைவெளி, முகக் கவசம் அணிவது போன்றவற்றை முறையாக கடைபிடிக்க வேண்டும். மக்களுக்கு மருத்துவ ரீதியாக தேவைப்படும் உதவிகளை மாநகராட்சி நிச்சயம் செய்யும், அனைவருமே தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
மேலும், மாநகராட்சியில் வளர்ச்சிப் பணி, கரோனா தடுப்புப் பணி, நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்திலும் கவனம் செலுத்தப்படும்.

மாநகராட்சியில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவது ஒரு சவாலான விஷயமாக இருந்து வருகிறது. அதற்கு தீர்வு காண தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். மழை வருவதற்கு மூன்று மாதங்கள் உள்ளன. அதற்கு முன்பாக மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என தெரிவித்தார்.

இவர் 2015ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அலுவலராக தேர்வானவர். விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் உதவி ஆட்சியராக பணியாற்றிய அவர், தொடர்ந்து சென்னை வணிகவரித் துறையில் அதிக வரி செலுத்துவோர் பிரிவில் இணை ஆணையராக பதவி வகித்தார். அதனைத் தொடர்ந்து தற்போது தூத்துக்குடி மாநகராட்சியின் 20ஆவது ஆணையராக பொறுப்பேற்றுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.