தூத்துக்குடி: தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பினால் பலர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வாழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோர் கடுமையாக பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
இதனை போக்கும் பொருட்டு விளாத்திகுளத்தில் வணிகர் சங்கம் சார்பில் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார், அம்மாவட்டத்தில் வாழும் நாட்டுப்புற கலைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளர்கள் உள்பட 100 பேருக்கு அரிசி, காய்கறி, மளிகை போன்ற நிவாரண பொருட்களை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாடு அரசு அறிவித்தவாறு 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். தகுந்த இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.
அவ்வப்போது கைகளை சோப்பு மற்றும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு அறிவித்து வரும் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து, அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ், காவல் ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: உயர் நீதிமன்றங்களுக்கு 44 அரசு வழக்கறிஞர்கள் நியமனம்: தமிழ்நாடு அரசு ஆணை