தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக தொடர்ந்து பரவலாக பலத்த மழை பெய்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மழை நின்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் நேற்று காலை முதல் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து நேற்று காலை முதல் தூத்துக்குடி மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மிதமான மழை பெய்து வருகிறது. இந்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும், கடந்த சில நாட்களாக இருந்த வந்த வெயிலின் தாக்கம் தணிந்துள்ளது.
ஏற்கெனவே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பாசனக்குளங்கள் 80 விழுக்காட்டிற்கும் மேல் நிரம்பிய நிலையில், நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்திருப்பதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:
"சாம்பாருக்கு முக்கியம் ஆனியன்; பிரண்ட்ஸிப்புக்கு முக்கியம் ரீ-யூனியன்": நடிகர் சின்னி ஜெயந்த்!