தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக செல்போன் கடையை திறந்துவைத்திருந்தனர் என குற்றஞ்சாட்டி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கைதுசெய்து காவலர்கள் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக அடுத்தடுத்து தனியார் மருத்துவமனையில் மரணம் அடைந்தனர். நாடு முழுக்க கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில் காவலர்களின் முதல் தகவல் அறிக்கை பொய்யானது என சிசிடிவி ஆதாரங்கள் வாயிலாக தெரியவந்தது.
இந்த வழக்கை நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து அங்கு விசாரிக்க சென்ற கோவில்பட்டி நீதித்துறை நடுவர் (மாஜிஸ்திரேட்) பாரதிதாசனும் காவலர்களிடமிருந்து மிரட்டல் மற்றும் அவமதிப்பை எதிர்கொண்டார். இதற்கிடையில் இரண்டு எஸ்.ஐ. உள்பட காவலர்கள் ஐந்து பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302ன் கீழ் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து எஸ்.ஐ. ரகு கணேஷை காவலர்கள் நேற்று நாங்குநேரியில் கைதுசெய்தனர். இந்தநிலையில் இன்று காலை தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் பாலகிருஷ்ணன் கைதுசெய்யப்பட்டார். அவருடன் காவலர் முத்துராஜ், முருகன் ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: சாத்தான்குளம் விவகாரம் :கொலை வழக்காக எப்.ஐ.ஆர் பதிவு