ETV Bharat / city

தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையராக சரண்யா அரி பொறுப்பேற்பு! - தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையர் சரண்யா அரி

தூத்துக்குடி: தூத்துக்குடி நகரில் மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காண்பேன் என்று மாநகராட்சி புதிய ஆணையாளர் சரண்யா அரி தெரிவித்துள்ளார்.

thoothukudi corporation commissioner
தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையர் சரண்யா அரி
author img

By

Published : Feb 8, 2021, 5:11 PM IST

தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய ஆணையராக சரண்யா அரி இன்று (பிப். 8) பொறுப்பேற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தூத்துக்குடி மாநகராட்சியில் நிலவிவரும் மழைநீர் வடிகால் மற்றும் மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ஜெயசீலன், திடீரென சென்னை சர்வே மற்றும் நில ஆவணம் பிரிவு கூடுதல் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் உதவி ஆட்சியராக பணியாற்றி வந்த சரண்யா அரி ஆணையராக நியமிக்கப்பட்டார்.

கடந்த 2019ஆம் ஆண்டு தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டவர் வி.பி.ஜெயசீலன். பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் சைக்கிள் ஸ்டாண்டு குத்தகை, கழிப்பறை, குளியலறை குத்தகை என பல்வேறு டெண்டர்களை ஒழித்து அனைத்தையும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மாநகராட்சியின் நேரடி கண்காணிப்பில் கொண்டு வந்தார்.

இவர் பணிமாறுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது தூத்துக்குடி மாநகராட்சியின் 19ஆவது புதிய ஆணையராக சரண்யா அரி பொறுப்பேற்றுள்ளார்.

thoothukudi corporation commissioner
தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையராக பொறுப்பேற்றுக்கொண்ட சரண்யா அரி

சரண்யா அரி தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர். எஸ்.ஆர்.எம். பல்கலைகழகத்தில் பி.டெக். தகவல் தொழில்நுட்பம் படித்த இவர், இந்திய ஆட்சிப்பணி தேர்வு எழுதி 2015ஆம் ஆண்டு தேர்வானார். ஆட்சிப்பணி தேர்வில் தமிழ்நாடு அளவில் முதல் இடத்தையும், அகில இந்திய அளவில் 7ஆம் இடத்தையும் பிடித்த இவரது தந்தை முன்னாள் இந்திய விமானப் படை அலுவலர் ஆவார்.

இதையும் படிங்க: சீரமைக்கப்படாத சாலைகள்: ஆய்வுசெய்து அறிக்கைத் தாக்கல்செய்ய உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.