ETV Bharat / city

பிப்ரவரி 23ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த ஆட்சியரிடம் மனு!

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டத்தில் பிப்ரவரி 23ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த ஆவண செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்கத்தினர் மனு அளித்துள்ளனர்.

author img

By

Published : Jan 3, 2020, 10:28 PM IST

permission for feb23 jallikattu in srivaigundam, jallikattu in tuticorin, பிப்ரவரி 23ஆம் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த ஆட்சியரிடம் மனு, ஸ்ரீவைகுண்டம் ஜல்லிக்கட்டு
பிப்ரவரி 23ஆம் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த நடவடிக்கை எடுக்கக்கோரி ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜா தலைமையில் நிர்வாகிகள் பலர் இன்று மாலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியைச் சந்தித்து இது தொடர்பாக மனு அளித்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து ராஜா கூறுகையில், “தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த வேண்டும் என வலியுறுத்தி இரண்டு ஆண்டுகளாக நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். இதுதொடர்பாக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோரைச் சந்தித்து மனு அளித்தோம்.

அதன்பேரில் ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதுதொடர்பாக இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம். பிப்ரவரி 23ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்திட, அரசாணை வெளியிட அரசுக்கு பரிந்துரை செய்யவேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு வழங்கியுள்ளோம்.

பிப்ரவரி 23ஆம் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த ஆட்சியரிடம் மனு

இதற்கான உரிய வழிமுறைகளின் படி அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார். தென் மாவட்டங்களில் மதுரைக்கு தெற்கே ஜல்லிக்கட்டுப் போட்டி நடந்ததில்லை. ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுமேயானால் பக்கத்து மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் என சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரளும் மிகப்பெரிய ஜல்லிக்கட்டுப் போட்டியாக இது இருக்கும்” என்றார்.

Intro:ஸ்ரீவைகுண்டத்தில் பிப்ரவரி 23ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஆவண செய்ய வேண்டும் - மாவட்ட ஆட்சியரிடம் ஏறுதலுவுதல் பாதுகாப்பு இயக்கத்தினர் மனு

Body:ஸ்ரீவைகுண்டத்தில் பிப்ரவரி 23ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஆவண செய்ய வேண்டும் - மாவட்ட ஆட்சியரிடம் ஏறுதலுவுதல் பாதுகாப்பு இயக்கத்தினர் மனு

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த நடவடிக்கை எடுக்கக்கோரி ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

ஏறுதழுவுதல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜா தலைமையில் நிர்வாகிகள் பலர் இன்று மாலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்தித்து இது தொடர்பாக மனு அளித்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து ராஜா கூறுகையில்,
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என வலியுறுத்தி கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். இதுதொடர்பாக தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோரை சந்தித்து மனு அளித்தோம். அதன்பேரில் ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதுதொடர்பாக இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம். வருகிற பிப்ரவரி 23ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்திட அரசாணை வெளியிட அரசுக்கு பரிந்துரை செய்யவேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு வழங்கியுள்ளோம். இதை உரிய வழிமுறைகளின் படி அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதாக மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார். தென் மாவட்டங்களில் மதுரை மதுரைக்கு தெற்கே ஜல்லிக்கட்டு போட்டி நடந்ததில்லை. ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமேயானால் பக்கத்து மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் என சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் திரளும் மிகப்பெரிய ஜல்லிக்கட்டு போட்டியாக இருக்கும் என தெரிவித்தனர்.

பேட்டி: ராஜா - ஏறு தழுவுதல் பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.