தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, வானரமுட்டி பகுதியைச் சேர்ந்த மாணவி சுதா. அரசு பள்ளி மாணவியான இவர், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு உள்இடஒதுக்கீட்டில், தேனி மருத்துவ கல்லூரியில் மருத்துவப் படிக்க தேர்வாகியுள்ளார்.
மருத்துவ மாணவி சுதாவிற்கு படிப்பு செலவிற்காக, ரூ. 30,000 பணத்தை தனது சொந்த நிதியிலிருந்து, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு வழங்கினார்.
உதவித் தொகை பெற்றுக் கொண்ட மாணவி சுதா, அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு நன்றியினை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் போது, மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், கோவில்பட்டி கோட்டாட்சியர் விஜயா உள்பட பலர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தி அறிவிப்பு