ETV Bharat / city

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு பெருகும் ஆதரவு: மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்! - மத்திய அரசு

தூத்துக்குடி: வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் நடைபெற்றது.

Marxist Party protest
Marxist Party protest
author img

By

Published : Dec 1, 2020, 8:38 PM IST

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டியும், விவாசாயிகளை பாதிக்கும் சட்டங்களை கண்டித்தும், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மறியில் போராட்டம் இன்று(டிச.1) நடைபெற்றது.

இப்போராட்டமானது கோவில்பட்டி பயணியர் விடுதி முன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.பி. ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் முழங்கியவாறு ஊர்வலமாக சென்றனர்.

மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்

பின்னர், அவர்களை மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் தடுத்து நிறுத்தினர். ஆனாலும் போராட்டத்தை கைவிட மறுத்து காவல்துரையினரை கடந்து சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இளையரசனேந்தல் விலக்கு பகுதியில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட இரண்டு பெண்கள் உட்பட 35 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வெளிநடப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.