ETV Bharat / city

பாஜக ஆட்சியையும், அதன் பினாமி அதிமுக ஆட்சியையும் ஒழித்துக் கட்டுவோம்! கனிமொழி சாடல் - தேர்தல்ப் பரப்புரை

தூத்துக்குடி: ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதியில் திமுக வேட்பாளர் எம்.சி‌.சண்முகையாவை ஆதரித்துப் பேசிய கனிமொழி, நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தல் என்பது கடைக்குச் சென்று பெரிய பொருள் வாங்குவது போல. அந்த பொருளுக்கு இலவச இணைப்பாகக் கிடைக்கக் கூடியது தான் இந்த இடைத்தேர்தல் என்று சூசகமாகத் தெரிவித்தார்.

கனிமொழி
author img

By

Published : Apr 13, 2019, 9:46 PM IST

தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளராக எம்.சி.சண்முகையா அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக வேட்பாளர் எம்.சி‌.சண்முகையாவை ஆதரித்து திமுக மாநில மகளிர் அணிச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளருமான கனிமொழி ஒட்டப்பிடாரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசுகையில்,

‘நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல், சட்டப்பேரவை தொகுதி இடைத் தேர்தல்களின் மூலம் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற கூடிய ஆட்சியை மாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இத்தேர்தல்கள் மூலமாக மத்தியிலும், மாநிலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய மக்கள் விரோத ஆட்சியை நாம் அகற்ற வேண்டும். நீட் தேர்வைக் கொண்டுவந்து தமிழகத்தில் மாணவர்களின் கனவை எல்லாம் சிதைத்துவிட்டனர்.

அமைதியான முறையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய தூத்துக்குடி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரைச் சுட்டுக் கொன்றனர். இந்த அநீதிக்கு இன்று வரை நியாயம் கிடைக்கவில்லை. கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இன்றுவரை எழுந்து நடக்க முடியாத சூழல் உள்ளது‌. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. சிறு தொழில் வணிகம் எல்லாம் முடக்கப்பட்டுவிட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தல் என்பது கடைக்குச் சென்று பெரிய பொருள் வாங்குவது போல. அந்த பொருளுக்கு இலவச இணைப்பாகக் கிடைக்கக் கூடியது தான் இந்த இடைத்தேர்தல். ஆகவே நடைபெற உள்ள தேர்தல் மூலமாக மத்தியில் இருக்கக் கூடிய பாஜகவையும் ஆட்சியையும், தமிழகத்தில் இருக்கும் அதன் பினாமி ஆட்சியையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.’ என்று தேர்தல் உரை நிகழ்த்தினார்.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளில் முதற்கட்டமாக 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் வருகிற 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கடுத்தபடியாக மே 19-ம் தேதி தமிழகத்தில் காலி தொகுதிகளாக மீதம் இருக்கின்ற ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.

அதன்படி தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளராக எம்.சி.சண்முகையா அறிவிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் எம்.சி‌.சண்முகையாவை ஆதரித்து திமுக மாநில மகளிர் அணிச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளும் தொகுதி திமுக வேட்பாளருமான கனிமொழி ஓட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசுகையில்,
நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல்களில் மூலம் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற கூடிய ஆட்சியை மாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் என்பது சட்டமன்ற தேர்தலில் பாதிக்கு சமமானது.
ஏனெனில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் மூலமாக மத்தியிலும் மாநிலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய மக்கள் விரோத ஆட்சியை நாம் மாற்ற வேண்டும். மத்தியிலே தமிழர்களின் உறவின் உணர்வினை மதிக்கக் கூடிய காங்கிரஸ் தலைமையிலான அரசு பொறுப்பேற்க வேண்டும்.

நீட் தேர்வை கொண்டுவந்து தமிழகத்தில் மாணவர்களின் கனவை எல்லாம் சிதைத்துவிட்டனர். அமைதியான முறையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய தூத்துக்குடி மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரை சுட்டுக் கொன்றனர். இந்த அநீதிக்கு இன்று வரை நியாயம் கிடைக்கவில்லை. கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இன்றுவரை எழுந்து நடக்க முடியாத சூழல் உள்ளது‌. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லை. சிறு தொழில் வணிகம் எல்லாம் முடக்கப்பட்டு விட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தல் என்பது கடைக்கு சென்று பெரிய பொருள் வாங்குவது போல. அந்த பொருளுக்கு இலவச இணைப்பாக கிடைக்க கூடியது தான் இந்த இடைத்தேர்தல். ஆகவே நடைபெற உள்ள தேர்தல் மூலமாக மத்தியில் இருக்க கூடிய
பிஜேபி ஆட்சியையும், தமிழகத்தில் இருக்கும் அதன் பினாமி ஆட்சியையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.
மத்திய அரசும், மாநில அரசும் மக்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.

ஆகவே, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற,
100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக சரி செய்ய, மாணவர்கள், விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்ய, ஏறி, குளம் தூர்வாரி
தண்ணீர் பிரச்சனை தீர்க்க திமுகவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்றார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.