ETV Bharat / city

தூத்துக்குடியில் கரை ஒதுங்கிய 'ராட்சத பார்ஜர் கப்பல்'

author img

By

Published : Dec 13, 2021, 12:10 PM IST

தூத்துக்குடி மீனவக் குடியிருப்பில் பார்ஜர் கப்பல் ஒன்று கரை ஒதுங்கியதால் மீனவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

ராட்சத பார்ஜர் கப்பல்
ராட்சத பார்ஜர் கப்பல்

தூத்துக்குடி: இனிகோ நகர் மீனவ குடியிருப்பில் பார்ஜர் கப்பல் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி அருகே நடுக்கடலில் நிறுத்தப்பட்டிருந்த பார்ஜெட் கப்பல் இனிகோ நகர் கடலோரப் பகுதியில் குடியிருப்பிற்குள் வந்து மோதியதால் பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.

கடற்கரையில் ஒதுங்கிய பார்ஜர் கப்பல்

தூத்துக்குடியிலிருந்து மாலத்தீவு, கொழும்பு உள்ளிட்ட சில நாடுகளுக்குச் சரக்குகளைக் கொண்டுசெல்வதற்காக பார்ஜர் எனப்படும் சிறிய வகை கப்பல் ஒன்று இயக்கப்படும்.

கரை ஒதுங்கிய
கரை ஒதுங்கிய 'முத்தா எமரால்ட்' என்ற பார்ஜர் கப்பல்

ஆயிரக்கணக்கான டன் எடையுள்ள பார்ஜர் கப்பல், தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு சரக்குகளை ஏற்றிச்செல்லுவது வழக்கம். சரக்குகளை ஏற்றுவதற்காகப் பழைய துறைமுகத்தில் இடம் இல்லாத காரணத்தினால் சில நேரங்களில் அவை, நங்கூரப் பகுதியில் நிறுத்தப்படும்.

அவ்வாறு இடமில்லாத காரணத்தால் 'முத்தா எமரால்ட்' என்ற பார்ஜர் கப்பல் பழைய துறைமுகத்தில் வெளிப்பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது. இந்தக் கப்பலானது நேற்று (டிசம்பர் 12) திடீரென காற்றின் வேகத்தின் காரணமாக அங்கிருந்து இனிகோ நகர் கடற்கரைப் பகுதியில் வந்து மோதியது.

சேதம் தவிர்ப்பு

இந்த பார்ஜர் கப்பல் வருவதைக் கண்ட மீனவர்கள் உடனடியாக அங்கிருந்த தங்களது பைபர் படகுகளை நகர்த்தி கடற்கரைக்குக் கொண்டுவந்து பாதுகாத்தனர். இதன் காரணமாக அங்கிருந்த பல படகுகள் இந்த விபத்திலிருந்து தப்பின.

இந்த பார்ஜர் கப்பல் அங்கு வந்ததை அங்குள்ள மக்கள், சிறுவர்கள், சிறுமியர் ஆச்சரியத்துடன் பார்த்தனர். மீனவர்கள் விழிப்புடன் செயல்பட்டு தங்களது படங்களை அகற்றி அதன் காரணமாக ஏராளமான படங்கள் சேதமடைவது தவிர்க்கப்பட்டது.

இதையும் படிங்க: வாக்காளர் பட்டியலில் இந்தியில் பெயரிடப்பட்டதால் சர்ச்சை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.