ETV Bharat / city

மருத்துவமனைகளில் ஏற்படும் தீ விபத்துகளிலிருந்து நோயாளிகளைப் பாதுகாப்பது எப்படி? விவரிக்கிறது ஈடிவி பாரத் - தீக்காயப் பிரிவு

தூத்துக்குடி மக்கள் நலனைப் பாதுகாப்பதில் அரசுக்கு அடுத்தபடியாக மருத்துவமனைகள் சிறந்த சேவையினை செய்துவருகின்றன. சாதாரண காய்ச்சல் முதல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வரை நாம் அனைவரும் சார்ந்திருப்பதும் நம்பத் தகுந்ததும் மருத்துவமனைகளைத்தான். அப்படிப்பட்ட மருத்துவமனைகள் உண்மையில் நமது உயிருக்கும் உடைமைக்கும் உறவினர்களுக்கும் பாதுகாப்பானதா? மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக, வெளி நோயாளிகளாக தினமும் ஆயிரக்கணக்கில் வந்துசெல்லும் மக்களுக்குத் தேவையான பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா? மருத்துவமனைகளில் திடீரென நிகழும் தீ விபத்துக்களிலிருந்து பாதுகாக்க நிர்வாகத்தினர் முறையான பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி உள்ளனரா? தீ பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகள் என்னென்ன எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து அட்டவணைப்படுத்திட ஈடிவி பாரத் விரும்பியது. அது குறித்து பார்க்கலாம்.

மருத்துவர்
மருத்துவர்
author img

By

Published : Dec 13, 2020, 7:58 AM IST

Updated : Jan 7, 2021, 10:38 PM IST

இந்தியாவில் 2011ஆம் ஆண்டு கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து பிராணவாயு (ஆக்சிஜன்) வழங்குவதில் ஏற்பட்ட குறைபாடு, சிக்கல்கள் காரணமாகவும் தொடர் உயிரிழப்புகளை நாடு சந்தித்திருந்தது. இந்தச் சம்பவங்களைக் கருத்தில்கொண்டு மருத்துவமனைகளில் தீ பாதுகாப்புக்குத் தேவையான வழிகாட்டு நெறிமுறைகளைத் திருத்தி மத்திய அரசு வெளியிட்டது.

நாட்டிலுள்ள அனைத்து மருத்துவமனைகளும் இந்தப் பாதுகாப்பு நடைமுறைகளை உடனே அமல்படுத்தி பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது. இவை தற்போது உள்ள காலங்களில் முறையாகப் பின்பற்றப்படுகின்றவா என்பதைக் களத்தில் நின்று ஆய்வு செய்கையில், அதனுடைய நிறை, குறைகளை இங்கு கட்டுரையாகக் காணலாம்...

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இது தவிர மாவட்டத்தில் இரண்டு நகராட்சிகளில் அரசு மருத்துவமனைகளில் கோவில்பட்டியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது. மேலும் மாவட்ட சுகாதாரத் துறையின் சார்பில் நகரப்பகுதியில் பொதுமக்கள் விரைவாக மருத்துவச் சேவையைப் பெறும்வகையில் நகர்ப்புற சுகாதார மையங்களும், தனியார் தொழில் நிறுவனத்தின் பங்களிப்பின் பேரில் தூத்துக்குடி கணேஷ் காலனி பகுதியில் சுகாதார வளாகமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதைத்தவிர மாவட்டம் முழுவதிலும் பல்வேறு தனியார் மருத்துவமனைகள் மக்களுக்குப் பொதுநல சேவை செய்துவருகின்றன.

மருத்துவமனைகளில் தீ பாதுகாப்பு 100% முறையாகப் பின்பற்றுவதன் அவசியம் குறித்து தூத்துக்குடியைச் சேர்ந்த மனநல சிறப்பு மருத்துவரான சிவசைலம் நமது ஈடிவி பாரத் ஊடகத்திடம் விவரித்ததாவது:

நோயாளிகளின் உயிருக்கும் உடைமைக்கும் அவர்களைப் பாதுகாக்கும் உறவினர்களுக்கும் மருத்துவமனையில் பாதுகாப்புக்கு உத்திரவாதம் அளிக்கும்விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்ய வேண்டும். அவற்றில் ஒன்று மருத்துவமனைகளில் தீ பாதுகாப்புக்கு செய்துவைக்க வேண்டிய நடவடிக்கைகள் ஆகும்.

  • மருத்துவமனைகளில் தீ பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் அவசர காலத்துக்கு உதவியாக இரண்டு வழிகள் அமைத்திருக்க வேண்டும்.
  • நடைபாதை மூன்று அடிக்கும் குறையாமல் இருக்க வேண்டும்.
  • நுழைவுவாயில் அகலமானதாகவும் மருத்துவமனைக்கு உள்ளே தீயணைப்பான் கருவிகள் தகுந்த இடத்தில் எளிதில் எடுக்கக் கூடிய வகையில் பொருத்திட வேண்டும்.
  • இது தவிர புகை உணர் கருவிகளையும் தகுந்த இடங்களில் பொருத்தி தீ பாதுகாப்பை உறுதிசெய்திட வேண்டும்.
  • மருத்துவமனையில் எதிர்பாராத நேரங்களில் நிகழும் தீ விபத்துகளை அணைப்பதற்கு தண்ணீர் தொட்டியிலிருந்து நேரடியாக மருத்துவமனையின் ஒவ்வொரு தளத்திலும் நீர் தெளிப்பானுடன் தண்ணீர் இணைப்பினை உறுதிசெய்திட வேண்டும்.

இது போன்ற சில நடைமுறைகளை 100% அளவு பூர்த்திசெய்தால் மட்டுமே மருத்துவமனை தீ பாதுகாப்பு வழி நெறிமுறைகளை முழுவதும் பின்பற்றுவதாகச் சான்று அளிக்கப்படும்.

தீ பாதுகாப்பு குறித்து மாவட்ட தீயணைப்பு அலுவலர் குமாரிடம் கேட்டபோது அவர், "மருத்துவமனைகளில் தீ பாதுகாப்பை உறுதிசெய்வது அடிப்படை அம்சங்களில் ஒன்று. சாதாரணமாக தரைத்தளம் மட்டும் உள்ள மருத்துவமனைகள் முதல் பல அடுக்குகளைக் கொண்டுள்ள மருத்துவமனைகள்வரை அனைத்திலும் நோயாளிகளின் உயிர் பாதுகாப்பை உறுதிசெய்திடும் வகையில் அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.

அதிலும் தீ விபத்துகளிலிருந்து நோயாளிகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு அதற்குச் சான்றிதழும் பெற்றிருப்பது அவசியமாகும். தரைத்தளம் மட்டும் கொண்டுள்ள மருத்துவமனைகளில் தீயணைப்புக் கருவிகள், நீர் தெளிப்பான், போதுமான அளவு இடைவெளி, தீ விபத்து நேரங்களில் தீயணைப்புக் கருவிகளைக் கொண்டுசெல்ல ஏதுவான வழிகள், போதிய இடவசதி ஆகியவை இருத்தல் வேண்டும். பல அடுக்குகளைக் கொண்ட மருத்துவமனைகளிலும் இதேபோன்று நடைமுறை பின்பற்றுவது அவசியமாகும்.

  1. தகுந்த இடங்களில் தீயணைப்புக் கருவிகளைப் பொருத்தி அவசரகால வழியினைப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களின் கண்ணில் தெரியும்படி ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட வேண்டும். தீயணைப்புக் கருவிகள் அனைவராலும் பயன்படுத்தக்கூடிய வகையில் செயல் விளக்கத்துடன் பொருத்தியிருக்க வேண்டும்.
  2. மேலும் தீயணைப்புக் கருவிகளில் உள்ள ரசாயனங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மிகாமல் இருக்குமாறு கண்காணிக்க வேண்டும். தீயணைப்புக் கருவிகள் ரசாயன இருப்பு மற்றும் செயல் குறித்து ஆய்வுகள் நடத்தி அட்டவணையைப் பூர்த்திசெய்ய வேண்டும்.
  3. மருத்துவமனையின் பிரதான நுழைவு வாயில் 3 அடிக்கு குறையாமல் இருக்க வேண்டும். அவசர காலத்தில் பயன்படுத்துவதற்காக இரண்டு வழிகள் செய்திருக்க வேண்டும். நோயாளிகள் வெளியேறுவதற்குப் போதுமான கால அவகாசங்கள் இடவசதி இருத்தல் வேண்டும். தீ விபத்து நிகழ்வதற்கு முன் புகையினை உணர புகை உணர் கருவிகள் தகுந்த இடங்களில் அமைத்து அவை செயல்படுவதை மருத்துவமனை நிர்வாகம் உறுதிசெய்திட வேண்டும்.
  4. ஆபத்தான மருந்துப் பொருள்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்கள் இருக்கும் இடத்தில் அதற்குரிய ரசாயனங்கள் அடைக்கப்பட்ட தீயணைப்புக் கருவிகளை வைத்திருக்க வேண்டும். மருத்துவமனையின் அனைத்துத் தளங்களிலும் தண்ணீர் தெளிக்கும் தீயணைப்புக் கருவி பொருத்தி பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிசெய்வது அவசியமாகும்” என்றார்.

இந்தியாவிலேயே தமிழ்நாடு மருத்துவ சுற்றுலா எனப்படும் மெடிக்கல் டூரிசத்தில்(Medical Tourism) மிக முக்கிய பங்காற்றுகிறது. அதிலும் குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் உள்ள சிஎம்சி மருத்துவ சுற்றுலாவிற்கு பெயர் போன மருத்துவமனையாக விளங்குகிறது. மணிப்பூர், நாகலாந்து, மிசோரம், மராட்டியம் எனப் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இங்குவந்து சிகிச்சைப் பெறுபவர்கள் அதிகம். மேலும் அடுக்கப்பாறை அரசு மருத்துவமனை, விஐடி குழுமத்திற்கு சொந்தமான கருவி மருத்துவமனை மற்றும் நாராயனி மருத்துவமனை என வேலூரில் பல பல்நோக்கு மருத்துவமனைகள் உள்ளன.

மருத்துவமனைகளில் ஏற்படும் தீ விபத்துகளிலிருந்து நோயாளிகளைப் பாதுகாப்பது எப்படி?

இந்த மருத்துவமனைகளில் தீ விபத்து ஏற்படும் சமயத்தில் தீயை அணைப்பதற்கான தீயணைப்பான் மற்றும் தீயணைப்பிற்கான பிரத்யேக சாதனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்று ஈடிவி பாரத் கள ஆய்வு மேற்கொண்டது. ஆய்வின் அடிப்படையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் தீயணைப்பான் மற்றும் தீயனைப்பிற்கான பிரத்யேக சாதனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறது என்பது தெரியவந்தது.

இது குறித்து வேலூர் சிஎம்சி மருத்துவமனையின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் துரை ஜாஸ்பர் கூறுகையில் "சிஎம்சியில் தீயணைப்பு துறைக்கென பிரத்யேகமாக தீயணைப்புத் துறை அலுவலரை நியமித்து உள்ளோம். மேலும் மினி தீயணைப்பு வண்டி ஒன்றும் உள்ளது. அதுவும் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையை சுற்றி போதுமான அளவில் தீயணைப்பு குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் தீயணைப்பான்களும் முறையாக பராமரிக்கப்பட்டு வருகிறது" என்றார்.

மேலும் வேலூர் அரசு மருத்துவமனையின் டீன் செல்வி கூறுகையில் "தீயணைப்பு மற்றும் அது சார்ந்தவைகள் மருத்துவமனையின் மின்சாரத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது. இந்த மருத்துவமனையில் 15 நாள்களுக்கு முன்பு கூட வேலூர் மாவட்ட தீயணைப்புத் துறையின் சார்பாக தீயணைப்பு உபகரனங்களை எப்படி பயன்படுத்துவது உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் கடந்த அக்டோபர் 17 அன்று மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற உலக ட்ராமா தினத்தன்று (World Trauma Day) கூட தீயணைப்பான்களை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து மருத்துவமனை ஊழியர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் பல்வேறு வகையான தீயணைப்பான்கள் முறையாக பராமரிக்கப்பட்டு நல்ல நிலையில் உள்ளது" என்கிறார்.

வேலூர் மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் லச்சுமி நாராயணன் கூறுகையில் "வேலூரில் மொத்தம் 16 தீயணைப்பு நிலையங்கள் உள்ளன. இவற்றின் கட்டுப்பாட்டின் கீழ் வரக்கூடிய மருத்துவமனைகள் தீயணைப்பிற்கான உரிமத்தை (Fire Licence) புதுப்பிக்க கோரி விண்ணப்பிக்கும் போது, தீயணைப்புத் துறையினர் நேரில் சென்று குறிப்பிட்ட அந்த மருத்துவமனையில் உள்ள தீயணைப்பான்கள் மற்றும் தீயணைப்பு சாதனங்களின் நிலை குறித்து ஆய்வுசெய்வர். முறையாக பராமரிக்கப்பட்டிருந்தால் மட்டுமே உரிமம் புதுப்பித்து தரப்படும். இச்சூழலில் வேலூரில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் முறையாக பராமரித்து வருகின்றன. மேலும் சமீபத்தில் மருத்துவமனைகளின் தீயணைப்பு துறையில் எந்த ஒரு முறைகேடும் இருப்பதாக தீயணைப்புத் துறை கண்டறியவில்லை, நோட்டீஸும் கொடுத்தது இல்லை" என்றார்.

இவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது வேலூரில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் தீயணைப்பான்களை முறையாக பராமரிப்பதும், தீயணைப்புத் துறையின் வழிமுறைகளை ஒழுங்காகப் பின்பற்றுவதும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: மகிழ்ச்சியைத் தாண்டி அச்சத்தைக் கிளப்பும் சென்னை மழை!

Last Updated : Jan 7, 2021, 10:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.