தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்திலும் இன்று புனித வெள்ளி தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி நண்பகல் நடைபெற்ற சிறப்புப் பிரார்த்தனையில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். பிரார்த்தனையின் முடிவில் இயேசு கிறிஸ்து சிலுவையில் சுமந்துசெல்வதைக் குறிக்கும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்றது. பனிமயமாதா தேவாலயத்திலிருந்து புறப்பட்ட இந்த சிலுவைப்பாதை பவனி தேவாலயத்தின் நான்கு வீதிகளில் எடுத்து வரப்பட்டது.
அப்போது சிலுவைப்பாதையில் கலந்துகொண்ட பக்தர்கள் பிரார்த்தனைப் பாடல்களைப் பாடிச் சென்றனர். இச்சிலுவைப்பாதை நிகழ்வின் போது ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் கொளுத்தும் வெயிலைப் பொருட்படுத்தாது சுடுமணலில் முழங்காலிட்டு பிரார்த்தனை செய்தனர். இதனையொட்டி ஆங்காங்கே நீர்மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. சிலுவைப் பாதையில் சுமந்து செல்லும் ‘ஆசந்தி சொரூபம்’ என்று அழைக்கப்படும் இந்த சொரூபமானது பனிமயமாதா, மணப்பாடு ஆகிய இரண்டு தேவாலயங்களில் மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.