ETV Bharat / city

'தூத்துக்குடியில் தினசரி 2 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்ய நடவடிக்கை' - Thoothukudi District Collector Sandeep Nanduri byte

தூத்துக்குடி: நாள்தோறும் 2 ஆயிரம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் 2000  பேருக்கு பரிசோதனை செய்ய நடவடிக்கை

author img

By

Published : Jul 21, 2020, 3:16 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், தொற்று பரவலைத் தடுப்பதற்காக மாநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் சுகாதார நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் உடனிருந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், "தொற்று பரவல் அதிகமாக ஏற்பட்டுள்ள பகுதிகளில் உள்ள அனைவரும் ரத்த, சளி மாதிரி பரிசோதனை செய்து கொள்வதற்காக 12 இடங்களில் பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பரிசோதனை மையங்கள் தினசரி காலை முதல் மாலை வரை செயல்படும்" என்றார்.

தூத்துக்குடி உழவர் சந்தை
தூத்துக்குடி உழவர் சந்தை

தொடர்ந்து பேசிய அவர், "தூத்துக்குடி உழவர் சந்தையில் கடை வைத்துள்ள வியாபாரிகள் 150 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், அதில் 21க்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. எனவே கடந்த ஐந்து தினங்களாகச் சந்தைக்குக் சென்றுவந்தவர்கள் தாங்களாகவே தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். தங்களைச் சோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்காக ஏற்கனவே 800 படுக்கைகள் தயாராக உள்ளன. மேலும் கூடுதலாக 800 படுக்கைகளும், கோவில்பட்டியில் 100 படுக்கைகளும், திருச்செந்தூரில் கூடுதலாக 150 படுக்கை வசதிகளும் ஏற்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் தினசரி 1,300 முதல் 1,400 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுகின்றன. ஒரு வாரத்திற்குள் நாள்தோறும் 2 ஆயிரம் பேருக்கு ரத்த, சளி மாதிரிகள் பரிசோதனை செய்ய தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்" என்றார்.

இதையும் படிங்க: ரோனாவுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை தொடக்கம் - அமைச்சர் விஜயபாஸ்கர்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.