தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தெற்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான சுற்றுலா மளிகை உள்ளது. இங்கு சதாம் உசேன் (29) என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று (நவ. 5) மாலை ஆறு மணியளவில் அங்கு காரில் வந்த தூத்துக்குடி சின்னகடை தெருவைச் சேர்ந்த பில்லா ஜெகன் (44) உள்பட ஆறு பேர் மது அருந்த அறை ஒதுக்கி தருமாறு, காவலாளி சதாம் உசேனிடம் கேட்டுள்ளனர். ஆனால், சதாம் அறை தர முடியாது என்று கூறியதால், ஜெகன் தரப்பினர் அவரை அடித்து உதைத்து கற்களால் தாக்கியதாக கூறப்படுகிறது.
அமைச்சரின் அனிதாவின் ஆதரவாளரா?
இதில், காயமடைந்த சதாம் உசேன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், பில்லா ஜெகன் உள்ளிட்ட ஆறு பேர் மீது 152, 147, 148, 452, 294 பி, 332, 324, 506(2), 510 ஆகிய ஒன்பது பிரிவுகளின்கீழ் தென்பாகம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
![பில்லா ஜெகன், billa jegan](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tut-02-minister-pa-attack-govt-employee-vis-script-tn10058_06112021082158_0611f_1636167118_596.jpg)
இதில் பில்லா ஜெகன், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர் என கூறப்படுகிறது. சுபாஷ் பண்ணையார் ஆதரவாளர்களால் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் அளித்த புகாரின் பேரில் அவருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினராகவும், விஜய் மக்கள் இயக்கம் தலைவராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.