ETV Bharat / city

தூத்துக்குடியில் அதிமுகவினரிடையே உள்கட்சி பூசல்: கார் கண்ணாடி உடைப்பு! - தூத்துக்குடி செய்திகள்

வாக்குப்பதிவின் போது அதிமுகவினரின் இருபிரிவினருக்கிடையே ஏற்பட்ட உள்கட்சி பூசலால் மோதல் உண்டானது. இதில் ஒரு பிரிவினரின் கார் கண்ணாடி கல்வீசி உடைக்கப்பட்டது.

கார் கண்ணாடி உடைப்பு
அதிமுகவினரிடையே உட்கட்சி பூசல்
author img

By

Published : Apr 6, 2021, 9:50 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுகவில் முன்னாள் இன்னாள் மாவட்டச்செயலாளர்கள் இரு அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி சட்டப்பேவைத் தொகுதி அதிமுக கூட்டணி கட்சியான தமாகவுக்கு ஒதுக்கப்பட்டது. இங்கு அக்கட்சியைச் சேர்ந்த எஸ்டிஆர் விஜயசீலன் போட்டியிடுகிறார்.

இன்று காலைமுதலே தூத்துக்குடி வாக்குச்சாவடி மையங்களில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. மாலையில், தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி, அதிமுகவின் முன்னாள் இன்னாள் மாவட்டச் செயலாளர்களின் அணிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது.

இதில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கூட்டத்தில் இருந்த அடையாளம் தெரியாத நபர்கள் கல்லை எறிந்ததில், அருகே இருந்த ஒரு கார் கண்ணாடி உடைந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தத் தகவலறிந்து அங்கு வந்த தென்பாகம் காவலர்கள், அதிமுகவின் இரு பிரிவினருக்கிடையே சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அங்கு கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பூணூல் குறித்த அமைச்சர் பெஞ்சமின் பேச்சு - கடுப்பான நாராயணன் திருப்பதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.