தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம், ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் சிவத்தையாபுரம் சர்ச் தெருவைச் சேர்ந்த ஞானஸ்டாலின் (24), அவரது நண்பர்கள் அமல்ராஜ் (23), புதுமைராஜ் (26), பொன்சீலன் (22), ஒட்டப்பிடாரத்தைச் சேர்ந்த முத்துபெருமாள் (எ) பெருமாள் (23) ஆகியோர் மீது கொலை, பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில், 5 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் அனுமதி அளித்ததன்பேரில் 5 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கீழ் கைதுசெய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் இன்று (பிப்.9) வரை கடந்த 40 நாள்களில் போக்சோ வழக்கு குற்றவாளிகள் 5 பேர், கஞ்சா, போதைபொருள் கடத்தல், விற்பனை செய்தவர்கள் 2 பேர், மணல் திருட்டு வழக்கில் ஒருவர் உள்பட 25 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பேராசிரியரைக் கண்டித்து பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் போராட்டம்