ETV Bharat / city

ஜெயலலிதா சொத்து முடக்க விவகாரம்: வழக்கறிஞர் கேள்விக்கு பதிலளிக்க மறுத்த சென்னை ஆட்சியர் - முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு குறித்து பிரம்மா

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரின் சொத்துகள் முடக்கம் பற்றி தகவல் தர வழியில்லை என திருநெல்வேலி வழக்கறிஞரின் கேள்விக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் பதிலளித்துள்ளார்.

திருநெல்வேலி வழக்கறிஞர் பிரம்மா, நெல்லை வழக்கறிஞர் பிரம்மா, ஜெயலலிதா சொத்து முடக்கம் விவகாரம்
TIRUNELVELI ADVOCATE FILED RTI ABOUT jeyalalitha ASSET CASE
author img

By

Published : Jun 8, 2021, 8:42 AM IST

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டில், இவர்கள் நான்கு பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இருப்பினும், இறுதி தீர்ப்பின்போது ஜெயலலிதா உயிரோடு இல்லாததால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேர் மட்டும் சிறைத்தண்டனை அனுபவித்தனர்.

தகவல் அறியும் சட்டத்தில் கேள்வி

இதற்கிடையில், நீதிமன்ற உத்தரவின்பேரில் நான்கு பேரின் சொத்துகளும் முடக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இச்சூழ்நிலையில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நான்கு பேரின் சொத்துகள் முடக்கப்பட்டது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான பிரம்மா, சென்னை மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் கேட்டு கடிதம் அனுப்பி இருந்தார்.

வழக்கறிஞரின் கடிதம்

அந்த கடிதத்தில் அவர், 'சென்னை மாவட்ட ஆட்சியர் அவர்களால், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் சொத்துகள் அரசு மூலம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது எனில், என்னென்ன சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் தருக.

சொத்து முடக்கம் செய்வதற்கு உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியான தேதியில் இருந்து எத்தனை தினங்களுக்குள் சொத்தினை முடக்கம் செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன் விவரம் தருக.

சொத்து முடக்கம் செய்யப்பட்டுள்ளது எனில் காலதாமதம் ஏற்பட்டால் அதற்குரிய காரணம், குறிப்புகள் ஆகியவற்றைத் தருக. உச்ச நீதிமன்றத்தால் முடக்கம் செய்ய உத்தரவிட்டுள்ள சொத்துகள் தவிர, மற்ற என்னென்ன சொத்துக்கள் முடக்கம் செய்யப்படாமல் உள்ளது என்ற விவரம் தருக.

மாவட்டம் + மாநிலம்

மேற்கண்ட நான்கு பேரின் சொத்துகள் தமிழ்நாடு முழுவதும், பிற மாநிலங்களிலும் உள்ளது எனில், சொத்து விவரம் அதன் அளவு மாவட்ட வாரியாக, மாநிலம் வாரியாக தனித்தனியே தருக.

சொத்துகள் முடக்கம் செய்யவும் அரசுடைமை ஆக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கையில் பிறப்பிக்கப்பட்ட தலைமைச் செயலாளரின் உத்தரவு நகல் தருக' என்பது உள்பட பல்வேறு தகவல்களைக் கேட்டு வழக்கறிஞர் பிரம்மா மனு அளித்திருந்தார்.

ஆட்சியரின் பதில்

இந்தச் சூழ்நிலையில் அவரது தகவலுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமியின் கூடுதல் நேர்முக உதவியாளர் பதில் கடிதம் ஒன்றை பிரம்மாவுக்கு அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் மேற்கண்ட நான்கு பேரின் சொத்துகள் குறித்து நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருப்பதால், அதுகுறித்த விவரம் தெரிவிக்க வழிவகை இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அதாவது வழக்கறிஞர் பிரம்மா கேட்டிருந்த அனைத்து தகவல்களுக்கும் பதில் தர வழிவகை இல்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சை

ஒட்டுமொத்த நாட்டையே திரும்பிப் பார்க்கச் செய்த சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில் அவர்களின் சொத்துகள் முடக்கம் பற்றி தகவல் கேட்ட வழக்கறிஞருக்கு அரசு உரிய பதில் அளிக்காமல் இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: ’மாற வேண்டியது சமூகம்தான்’ - LGBTQIA+ சமூகத்தினர் குறித்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கிய நீதிபதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.