திருநெல்வேலி: பொதுவாக புதிதாக வீடு கட்டும் பொழுது திருஷ்டி ஏற்படக் கூடாது என்பதற்கான அங்கு திருஷ்டி பொம்மை அல்லது பூசணிக்காய் பொம்மையைக் கட்டுவது வழக்கம். மேலும் திருஷ்டி போவதற்கு வீட்டில் தும்பை, துளசி, மணிபிளாண்ட், வெற்றிலை, அருகம்புல் போன்ற செடிகளை அதிகமானோர் வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள கலந்தபனை கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே தனக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டி வருகிறார். இவர் நூதன முறையில் பிளக்ஸ் பேனர் ஒன்றை வைத்துள்ளார்.
அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் திருஷ்டி பட்டுவிடக்கூடாது என்பதற்காக டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்துவின் போட்டோவுடன் 'மூஞ்சியும் மொகரையும் பாரு' என்ற வாசகம் பதித்த பிளக்ஸ் பேனர் ஒன்றை சற்று வித்தியாசமாக வைத்துள்ளார். இதனை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் பார்த்து சிரித்துக் கொண்டே கடந்து செல்கின்றனர்.
இதையும் படிங்க: வண்டலூர் உயிரியல் பூங்காவில் செயற்கை மழை - கோடை வெப்பத்தைத் தணிக்க புதிய முயற்சி