திருநெல்வேலி: பாபநாசம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அனவன்குடியிருப்பு என்ற கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த சுமார் 100 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அந்தப் பள்ளியின் கடந்த மாதம் மின்சார கட்டணத்தை செலுத்தாததால் மின்வாரியம் சார்பில் 15 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது, இதனிடையே திடீரென அந்த பள்ளிக்கு செல்லும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.
இதனால் பள்ளி மாணவ மாணவிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். வெயிலின் தாக்கத்தால் ஆசிரியர்கள் பள்ளி வளாகத்திலுள்ள மரத்தடியில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், இதுதொடர்பாக உயர் அலுவலர்களுக்கு தெரிவித்தோம், பாபநாசம் பகுதியிலுள்ள எந்தவொரு அரசு பள்ளிக்கான மின்சார பில்லும் இதுவரை மின்சாரத்துறையினர் எங்கள் அலுவலர்களுக்கு அனுப்பவில்லை, மின்சாரம் துண்டித்தால் அனைத்து பள்ளிகளிலும் துண்டித்து இருக்க வேண்டும், இங்கு மட்டும் ஏன் துண்டித்தனர் என தெரியவில்லை என்றனர்.
இதையும் படிங்க: 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் எடுக்கும் 8 வயது சிறுவன்