ETV Bharat / city

‘தேர்தல் வந்தால் மட்டுமே அரசியல்வாதிகளின் கண்களுக்கு மக்கள் தென்படுகிறார்கள்’ - நாங்குநேரி இடைத்தேர்தல் குறித்து அப்பகுதி மக்கள்

திருநெல்வேலி: தேர்தல் வந்தால் மட்டுமே மக்கள், அரசியல்வாதிகளின் கண்களுக்கு தெரிவதாக நாங்குநேரி தொகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

நாங்குநேரி இடைத்தேர்தல்
author img

By

Published : Sep 29, 2019, 9:29 AM IST

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 2 லட்சத்து 56 ஆயிரத்து 414 வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி உள்ளது. இந்நிலையில், தற்போது காலியாக உள்ள இத்தொகுதிக்கு அக்டோபர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனால் நாங்குநேரி தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது. கடந்த திமுக ஆட்சி காலத்தில் சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்பட்ட இந்த தொகுதி சுமார் 15 ஆண்டுகள் கடந்தும் திட்டமிட்டபடி தொழிற்சாலைகள் என எதுவும் அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் போதுமான போக்குவரத்து வசதிகள், சாலை வசதிகள், குடிநீர் வசதிகளின்றி சிரமப்படுவதாகவும் அந்த தொகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

நாங்குநேரி இடைத்தேர்தல் குறித்து அப்பகுதி மக்களின் கருத்து

1977 முதல் கடந்த முறை நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் வரை அதிமுக 5 முறை, திமுக அதன் கூட்டணி கட்சிகள் 4 முறை வென்றுள்ளது. ஒரு முறை ஜனதா கட்சி வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளராக நின்ற விஜயகுமாரை விட 10.04 % வாக்குகள் அதிகம் பெற்று வசந்தகுமார் 74 ஆயிரத்து 932 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதியில் எச்.வசந்தகுமார் இரண்டு முறை வெற்றி பெற்று மக்களுக்காக சொந்த செலவில் சில திட்டங்களை நிறைவேற்றியுள்ளதால் மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு பெற்றிருந்தார். இதையடுத்து நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றதைத் தொடர்ந்து நாங்குநேரி தொகுதி காலியாகியது.

தற்போது இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிக்கும் முன்பே சில கட்சிகளில் கடும் போட்டியும் பேரமும் தொடங்கியது. இந்நிலையில், தேர்தல் வந்தால் மட்டுமே மக்கள் அரசியல்வாதிகளின் கண்களுக்கு தெரிவதாகவும் இடைத்தேர்தலின் வெற்றியை மட்டுமே குறிவைத்து களமிறங்கும் அரசியல் கட்சிகளால் தங்கள் தொகுதிக்கு எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை எனவும் வருத்தம் தெரிவிக்கின்றனர் நாங்குநேரி பொதுமக்கள்.

இதையும் படியுங்க:

நாங்குநேரி தொகுதியில் குடும்ப சண்டையா? - வலுக்கிறது காங்கிரஸ் உட்கட்சி பூசல்

Intro:2 லட்சத்து , 56 ஆயிரத்து 414 வாக்காளர்களை கொண்ட தொகுதியான நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் இன்றைய நிலை என்ன?Body:2 லட்சத்து , 56 ஆயிரத்து 414 வாக்காளர்களை கொண்ட தொகுதியான நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் இன்றைய நிலை என்ன?

2 லட்சத்து , 56 ஆயிரத்து 414 வாக்காளர்களை கொண்ட தொகுதியாக நாங்குநேரி சட்டமன்ற தொகுதி உள்ளது. விவசாயம் பிரதான தொழிலாக இருந்தாலும் இந்த தொகுதியில் பல இடங்களில் விவசாய தேவைக்கு தண்ணீர் கிடைக்காமல் வறட்சி மிகுந்த தொகுதியாகவும் போதிய பேருந்து மற்றும் சாலை வசதிகளின்றி காட்சியளிக்கிறது.

நெல்லை மாவட்டம், நாங்குநேரி தொகுதி கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்கப்பட்டது. அவ்வாறு அறிவித்து சுமார் 15 ஆண்டுகள் கடந்தும் திட்டமிட்டபடி தொழிற்சாலைகள் என எதுவும் அங்கு அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. போதுமான போக்குவரத்து வசதிகள், சாலை வசதிகள், குடிநீர் வசதிகளின்றி அந்த தொகுதி மக்கள் சிரமப்படுவதே அன்றாடமாக உள்ளது என்று மக்கள் தங்களது வேதனையை தெரிவிக்கின்றனர் அதுமட்டுமின்றி தேர்தல் வந்தால் மட்டுமே மக்கள் அரசியல்வாதிகளின் கண்களுக்கு தெரிவதாகவும் குற்றசாட்டினை முன்வைக்கின்றனர் நாங்குநேரி மக்கள்.

1977 முதல் கடந்த முறை நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் வரை அதிமுக 5 முறை, திமுக அதன் கூட்டணி கட்சிகள் 4 முறை வென்றுள்ளது. ஒரு முறை ஜனதாகட்சி வேட்பாளரும் வெற்றிபெற்றுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் விஜயகுமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டு 57 ஆயித்து 617 வாக்குகள் பெற்றார். அவரை விட 10.04 % வாக்குகள் அதிகம் பெற்று காங்கிரஸ் கட்சி சார்பில் வசந்தகுமார் 74 ஆயிரத்து 932 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் எச்.வசந்தகுமார் இரண்டு முறை வெற்றி பெற்று மக்களுக்காக சொந்த செலவில் சில திட்டங்களை நிறைவேற்றியுள்ளதால் மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு பெற்றிருந்தார். இதையடுத்து நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றத்தை தொடர்ந்து நாங்குநேரி தொகுதி காலியாகியது.
இதனையடுத்து நாங்குநேரி மற்றும்
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளை இடைத்தேர்தல் அறிவித்தது தேர்தல் ஆணையம். இதில் நாங்குநேரி தொகுதியை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கென அந்த தொகுதியில் கணிசமான வாக்குகள் உள்ள நிலையில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் இந்த தொகுதியில் போட்டியிடுவதாகவே திமுக தலைமை முடிவெடுத்தது இதனால் கடந்த முறை போன்றே இரண்டு கட்சிகளும் மீண்டும் மோத உள்ளதால் இடைத்தேர்தல் களம் சூடு பிடித்தது. இதனிடையே பல எதிர்பார்ப்புகளும் பல திட்டங்களையும் எதிர்பார்த்து தொகுதி மக்கள் ஒருபுறம் காத்திருக்கின்றனர்.

கடந்த 23ம் தேதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் விருப்பமனுவை வாங்கிச்சென்றும் இதுவரை 9 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பிரதான கட்சிகளான அதிமுகவும் காங்கிரஸும் அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிக்கும் முன்பே கட்சிகளுக்கும் கடும் போட்டியும் பேரமும் தொடங்கிவிட்டது. அதன் வெளிப்பாடாக காங்கிரஸ் கட்சியின் நாங்குநேரி தொகுதியின் மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைமையை குற்றம்சாட்டி தனித்து போட்டியிடப்போவதாகவும் கூறியுள்ளனர். இந்நிலையில் நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான 30ம் தேதி அரசியல் கட்சிகளுக்கு இடையே கடும் பரபரப்பு ஏற்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இடைத்தேர்தலின் வெற்றியை மட்டுமே குறிவைத்து களமிறங்கும் அரசியல் கட்சிகளால் தங்கள் தொகுதிக்கு எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை என் நம்பிக்கை இழந்து நிற்கின்றனர் நாங்குநேரி தொகுதி மக்கள்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.